சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செக்கடிப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருடைய உதவியாளரும் கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கினார். இருவரையும் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செக்கடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் ராமமூர்த்தி என்பவர், அந்த பகுதியில் இறைச்சி மற்றும் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை பெயரில் 6 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கான பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் ராமமூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார், ரசாயன பவுடர் தடவிய 4 ஆயிரம் ரூபாயை நோட்டுக்களை ராமமூர்த்தியிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் தருமாறு தெரவித்தனர். அதன்படி, அவர் செக்கடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று தற்காலிக கிராம உதவியாளர் மாதவன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுயில் புதிதாகக் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உதவி மின் பொறியாளர், ஃபோர்மேன் ஆகியோரை லஞ்ச ஒழப்பு துறை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பாரேரி பகுதியைச் சேர்ந்த 60 வயதாகும் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். டிரைவரான சம்பத் தனது வீட்டுக்குப் புதிய மின் இணைப்பு பெறுவதற்காக சிங்கப்பெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்து 3 மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்புக்காக உதவி மின் பொறியாளர் ஜெயராணியை சம்பத் அணுகியபோது அவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சம்பத் புகார் கொடுத்தார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.20 ஆயிரம் பணத்துடன் சம்பத் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவரிடமிருந்து ஃபோர்மேன் சரவணன் (50)பணத்தைப் பெற்று உதவி மின் பொறியாளர் ஜெயராணியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், இருவரையும் கையும களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ₹20 டெண்டரே ஊழல் என்றால்.. ₹35 க்கு மின்சாரம் வாங்குவது என்ன கணக்கு? விஜய் அரசுக்கு கேள்விகள்
62 லட்சம் குழந்தைகள் ஒரு பைலட் பிராஜக்ட் அல்ல.. கேக் திட்டத்திற்கு எதிர்ப்பு.. அரசுக்கு கோரிக்கை