சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடிகை திரிஷா சாமி வேடத்தில் சித்தரிக்கப்பட்டு வைக்கப்பட்ட விளம்பர பதாகை தொடர்பாக கடை உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வகையிலும் அருவருத்தக்க வகையில் இருந்ததால் கடை உரிமையாளர் கோகுல் மற்றும் பதாகை வைத்த சந்துரு ஆகிய இருவர் மீதும் ஆத்தூர் நகர போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பொது இடத்தில் வைக்கப்பட்ட பேனர் காவல் துறையினரால் எடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆடி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் விளம்பர பதாகை வைக்கப்பட்டது. ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனரில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய் புகைப்படம் பின்பு ராவணன் தலை இருப்பது போன்றும், அதன் கீழ் சாமி வேடத்தில் நடிகை திரிஷா இருப்பது போல் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டது. கோவில் திருவிழாவில் திரிஷாவை சாமியாக வைக்கப்பட்ட பேனரால் பொதுமக்களுக்கும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுதொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பொது இடத்தில் வைக்கப்பட்ட பேனர் காவல் துறையினரால் அகற்றப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் த்ரிஷாவுக்கு பேனா் வைத்து கடையை விளம்பரப்படுத்திய கடை உாிமையாளா் கோகுல், பேனா் வைத்த சந்துரு ஆகிய இருவா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.