கயிறு இழுக்கும் போட்டி.. ரோப் அறுந்தததால் பொத்தென்று விழுந்த அமைச்சர் லோகேஷ்! பதறியடித்த அதிகாரிகள்

  • சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் தனியார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளும் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றார். அப்போது ரோப் அறுந்ததால் அமைச்சர் லோகேஷ் பொத்தென்று கீழே விழுந்தார். உடனே அதிகாரிகள் பதறிப்போயினர். உடனடியாக அமைச்சரை ஒடிச்சென்று போலீசார் தூக்கிவிட்டனர்.

    Advertisement

    சேலம் அருகே உள்ள அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் பங்கேற்றார்.

    Advertisement

    கீழே விழுந்த அமைச்சர்

    பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அந்த வகையில் கயிறு இழுக்கும் போட்டியும் நடைபெற்றது. அதில் அமைச்சர் லோகேஷ் கலந்து கொண்டு கயிறு இழுத்தார். இருபக்கமும் பலத்தை காட்டி போட்டியில் பங்கேற்றவர்கள் கயிறு இழுத்ததால், திடீரென கயிறு அறுந்தது.

    இதனால், பேலன்ஸ் தவறிய அமைச்சர் லோகேஷ் உள்ளிடவர்கள் பொத்தொன்று கிழே விழுந்தனர். இதனை பார்த்த அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதறினர். உடனடியாக அமைச்சரை ஒடிச்சென்று போலீசார் தூக்கிவிட்டனர். உடனே எழுந்த அமைச்சர் லோகேஷ் அங்கிருந்து சிரித்தபடியே நகர்ந்து சென்றார். சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த லோகேஷ் பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளித்தார்.

    Advertisement

    சமூக வலைத்தளங்களில் விமர்சனம்

    அமைச்சர் லோகேஷ் கயிறு இழுக்கும் போட்டியின் போது கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அமைச்சர் பங்கேற்க இருந்தும் கயிற்றின் தரத்தை உறுதி செய்யாமல் போட்டிக்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் லோகேஷ், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ஆவார். அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கடந்த தேர்தலில் கட்சி தலைமை சீட் வழங்கவில்லை. இதனால், தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார். அவரது மகன் லோகேஷ் தவெகவில் இணைந்த நிலையில் அவருக்கு உடனடியாக சீட்டும் வழங்கப்பட்டது. லோகேஷ் தமிழ்ச்செல்வன் 74,808 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏவும் ஆனார்.

    English Summary

    Minister Lokesh: An alumni event was held at a private college in Ammapettai, Salem, attended by Minister Lokesh Tamilselvan. During the event, which featured various competitions, the Minister participated in a tug-of-war contest. Suddenly, the rope snapped, causing Minister Lokesh to fall heavily to the ground.