சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது?

  • சேலம்: திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை முறியடித்தோம், ஜாதி என்பதை முறியடித்தோம் என பேசிய நிலையில், ஓமலூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு தொகுதியில் தவெக ஓட்டுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்ததாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி சென்ற விஜய் அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தற்குறி என்று திமுகவினர் கூறினார்கள். தற்குறி என்று கூறிய உங்கள் அரசியல் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டனர்.

    Advertisement

    இப்ப எனக்கு எதிரிகள் இல்லை என்று சொல்லமாட்டேன். இப்பவும் அரசியல் ரீதியாக இரண்டே பேருக்கு மத்தியில்தான் போட்டியே. அது திமுக - தவெக இடையேதான் போட்டி. ஆறு மாதம் கால அவகாசம் கொடுப்போம் என்று சொன்னவர்கள்கூட ஆறே நாளில் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்." என்றார்.

    மேலும்," தவெக ஆட்சி அமைந்தால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாது. லஞ்சம் ஊழல் எல்லாம் இருக்காது. அதனால் தான் கூட்டணி அமைக்க முயன்றுள்ளனர். தேர்தல் அரசியலில் இவ்வளவு காலம் இருந்த சாதி, மதம், பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை உடைத்துள்ளோம். நாம் எது செய்தாலும் அரசியலமைப்பின்படியே செய்வோம். நமக்கு குதிரை பேரம் எல்லாம் தேவையில்லை." என்றார்.

    Advertisement

    இந்நிலையில், நிலையில், ஓமலூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு தொகுதியில் தவெக ஓட்டுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்ததாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதியமான்," பக்கத்து தொகுதியான சேலம் மேற்கில் தவெக வேட்பாளர் லட்சுமணன் பணம் கொடுத்ததால், தன் ஓமலூர் தொகுதியில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பாதிக்கப்பட்டது" என பேசியுள்ளார்.

    சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லட்சுமணன் வாக்காளர்களுக்கு ரூ.2000 பணம் கொடுத்தார் என, ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'ஓட்டுக்கு காசு கொடுக்காம ஜெயிச்சுருக்கோம்' என ஆக்ரோசமாக முதல்வர் விஜய் திருச்சியில் பேசிய நிலையில், தற்போது தவெக வேட்பாளரே பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A TVK candidate’s claim about cash distribution in Salem has sparked controversy, drawing attention after Vijay’s anti-cash-for-votes remarks.