தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்.. முதல் ஆளாக நடிகை! ஸ்க்ரிப்டுக்கு ஆடும் விஜய்.. வேல்முருகன் விளாசல்

  • சேலம்: ஒரு தலைமை பண்புக்கு உரிய ஆட்சி நடைபெறாததால் கட்டுப்பாடற்ற விளைவுகளை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும், முதல்வர் விஜய் 120 நாட்களைக் கடந்தும் இன்னும் நடிகராக தான் உள்ளார்.. அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் நடிகையை அமர வைத்திருக்கிறார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," போதை வஸ்துகளை மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்து அதன் மூலம் லஞ்சம் பெற்று வருகின்றனர் காவல்துறையினர். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    அதிகாரிகள் நினைப்பது தான் ஆட்சி என்ற நிலையில் தான் இந்த ஆட்சி நிர்வாகம் உள்ளது. வடநாட்டு இந்தியர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. தமிழகத்தில் திட்டமிட்டு அவர்களை கொண்டு பதவிகள் நிரப்பப்படுகிறது.

    வேல்முருகன்

    ஒரு தலைமை பண்புக்கு உரிய ஆட்சி நடைபெறாததால் கட்டுப்பாடற்ற விளைவுகளை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்கு திட்டமிடல் என்பது இந்த ஆட்சியிடம் இல்லை. மழை மற்றும் பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூட்டம் நடத்தி மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியதாக இதுவரை பார்க்கவில்லை.

    Advertisement

    தலைமைச் செயலகம்

    கடந்த ஆட்சியில் மக்களின் துயரத்தை அதிக அளவில் இல்லாமல் குறைத்து இருக்கிறார்கள் ஆனால் இந்த ஆட்சி விவசாயிகள் மாணவர்கள் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 10 லட்சம் கடன் உள்ள நிலையில் மீனவர்கள் வசிக்கும் இடத்தில் தலைமைச் செயலகம் அமைக்க போகிறோம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வர மாட்டோம் என கூறிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தற்போது திணித்திருக்கிறார்.

    விஜய்

    தமிழக முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற வேண்டும். இதுவரை 9 சாதிய ஆணவ படுகொலைகளும் 160க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகளும் நடந்தேறியுள்ளது. சட்டமன்றத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு ஆரோக்கியமான பதில் கிடையாது. விஜய் உரை முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட். எழுதி கொடுத்ததை, உடல் அசைவு எப்படி இருக்க வேண்டும் என அறையில் ரிகர்சல் எடுத்துவிட்டு பேசுகிறார்.

    Advertisement

    முதல் வரிசையில் நடிகை

    120 நாட்களைக் கடந்தும் அவர் இன்னும் நடிகராக தான் உள்ளார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் நடிகையை அமர வைத்திருக்கிறார்கள். லண்டனில் முதலீடு ஈர்க்கப் போகிறோம் என்று சென்ற இடத்தில், அங்கு நடிகைக்கு என்ன வேலை? தவறு செய்தால் யாராக இருந்தாலும் விடமாட்டேன் என வசனம் பேசியவர்கள், கரூரில் 41 பேர் இறந்ததற்கு யார் காரணம் என கண்டுபிடிக்க நடவடிக்கை இல்லை. கனிம வள கொள்ளையை தடுக்க நடவடிக்கை இல்லை. இன்னமும் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று கொண்டு தான் இருக்கிறது.

    Advertisement

    வீரமணி போக்சோ வழக்கு

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கை முடித்துக் கொள்கிறோம் என கூறி காப்பாற்ற முயற்சி செய்தது தவெக அரசு. அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கி திட்டமிட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இது ஜனநாயக படுகொலை. எந்த கட்சிகளும் செய்யாத விஷயத்தை கோட்டையில் கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடத்தியது தவெக அரசு.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி முன்வைக்கக்கூடிய எந்த கேள்விகளுக்கும் விஜய் பதில் அளிப்பதில்லை. அரசு அதிகாரிகளுக்கு தற்போது உள்ள அரசு மற்றும் அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லை. தகவல் அறியும் சட்டம் மூலம் கேள்வி கேட்டால் அவர்களுடைய தவறுகள் வெளியே வரும் என்பதால் பயந்து இன்று ஆணை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் முன் பதிலளிக்க வேண்டிய நேரம் வரும். அன்றைக்கு உங்களோடு சேர்ந்து ஆட்டம் போடும் அதிகாரிகளின் கொட்டம் அடங்கும்." என கூறினார்.

    English Summary

    வேல்முருகன்Tamilaga Vazhvurimai Katchi leader Velmurugan criticised Vijay government over governance, crime, power shortages and political developments.