இதுதான் சிங்கப்பூர்.. சர்வரில் 1.6 கோடி மனித நியூரான்கள்.. உலகின் முதல் பயாலஜிக்கல் டேட்டா சென்டர்!

  • சிங்கப்பூர்: உலகின் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் பல புதுமைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அப்படி தான் இப்போது டேட்டா சென்டர்களிலும் சிங்கப்பூர் ஒரு புதுமையை படைத்துள்ளது. மனித நியூரான்களை வைத்து சிங்கப்பூர் அதிநவீன டேட்டா சென்டரை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்ப்யூட்டிங் துறையில் புதிய முயற்சியாக, உயிருள்ள மனித நியூரான்களை சர்வர் ரேக்கில் இணைத்து இயக்கும் உலகின் முதல் பயோலாஜிக்கல் டேட்டா சென்டர் புரோட்டோடைப்பை சிங்கப்பூர் உருவாக்கியுள்ளது. சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சில கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

    Advertisement

    மனித நியூரான்கள்

    இதில் 20 பயோலாஜிக்கல் கம்ப்யூட்டிங் யூனிட்கள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டிலும் சுமார் 8 லட்சம் மனித நியூரான்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டவை. அங்குள்ள 20 யூனிட்களிலும் சேர்த்து சுமார் 1.6 கோடி நியூரான்கள் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

    வழக்கமான டேட்டா சென்டர்களில் உள்ள சர்வர்கள் சிலிக்கான் சிப்களை மட்டுமே பயன்படுத்தும். ஆனால், இந்த நியூரான் டேட்டா சென்டர்கள் மனித ஸ்டெம் செல்களில் இருந்து வளர்க்கப்படும் நியூரான்களை பயன்படுத்துகின்றன. அவை மைக்ரோஎலக்ட்ரோடு அரே கொண்ட சிலிக்கான் தளத்தில் வைக்கப்படுகின்றன. இந்த எலக்ட்ரோடுகள் மூலம் நியூரான்களுக்கு சிக்னல் அனுப்பப்படுவதுடன், அவற்றின் செயல்பாடுகளையும் பதிவு செய்ய முடியும்.

    Advertisement

    எப்படி வேலை செய்கிறது

    இதன் மூலம் சாப்ட்வேர் மற்றும் உயிருள்ள நியூரல் நெட்வொர்க்குக்கு இடையே ரியல் டைமில் தொடர்பை ஏற்படுத்த முடிகிறது. இதன் biOS அமைப்பு நியூரான்களை தூண்டவும், அவற்றின் செயல்பாடுகளை பதிவு செய்யவும் உதவுகிறது. இந்த வகையில் உருவாக்கப்படும் சர்வர்கள் சுமார் ஆறு மாதங்கள் வரை நியூரான் கல்சரை உயிருடன் வைத்திருக்கக்கூடியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

    டிஷ்பிரையன் என்ற சோதனையை அடிப்படையாக வைத்தே ஆய்வாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர். அதில் சுமார் 8 லட்சம் மனித மற்றும் எலி நியூரான்கள் சிப்புடன் இணைக்கப்பட்டு, பாங் (Pong) என்ற விளையாட்டை விளையாடும் பயிற்சி அளிக்கப்பட்டது. மின் சிக்னல்கள் மூலம் விளையாட்டு சூழல் நியூரான்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவை நேரடியாக விளையாட்டை விளையாடியது. இதை அடிப்படையாக வைத்தே நியூரான்களை வைத்து பயாலஜிக்கல் டேட்டா சென்டரை உருவாக்கியுள்ளனர்.

    Advertisement

    ஏன் முக்கியம்

    இந்த நியூரல் நெட்வொர்க்குகள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டு கற்று கொள்ளும் திறன் கொண்டவை என்பதால், அதிக அளவு டேட்டா தேவைப்படும் சில AI பணிகளுக்கு எதிர்காலத்தில் இவை உதவக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும், இப்போது ஏஐ காலத்தில் எனர்ஜி பயன்பாடு தான் மிக பெரிய கவலையாக இருக்கிறது. ஆனால், இந்த நியூரோ பயோலஜிக்கல் டேட்டா சென்டர்கள் டிஜிட்டல் கம்ப்யூட்டர்களை விட மிக குறைந்த எனர்ஜியை மட்டுமே பயன்படுத்தும் என்பது மிக பெரிய நல்ல செய்தி!

    பல வழிகளில் உதவும்

    இதனால் மருந்து கண்டுபிடிப்பு, உயிரியல் ஆராய்ச்சி, AI, ரோபோட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு மற்றும் மோசடி கண்டறிதல் போன்ற துறைகளில் இந்த பயன்பாடு அதிகரிக்கும். எனினும், இந்த தொழில்நுட்பம் தற்போதைய கம்யூடர்களை மொத்தமாக மாற்றம் அளவுக்கு செயல்திறன் கொண்டதா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

    Advertisement

    எனவே, சிங்கப்பூரின் இந்த முயற்சியை சிலிக்கான் டேட்டா சென்டர்களுக்கு உடனடி மாற்றாக பார்க்க முடியாது. இருப்பினும், உயிருள்ள மனித நியூரான்களையே கம்ப்யூட்டிங்கின் ஒரு பகுதியாக பயன்படுத்த முடியும் என்பதை சோதிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இவை வெற்றிகரமாக முடிந்தால் டேட்டா சென்டர்களை மொத்தமாக மாறி போகும்.

    English Summary

    Singapore researchers have developed a prototype biological data center that uses millions of lab-grown human neurons for computing(சிங்கப்பூரின் ஏஐ ஆய்வுகள்): Singapore new AI research latest news in tamil.