சிங்கப்பூரில் இந்தியர்கள் மீது இனவெறி விமர்சனம்! பிரதமர் காதுக்கு போன விஷயம்! உடனே பாய்ந்த நடவடிக்கை

  • சிங்கப்பூர்: சமூக வலைத்தளங்களில் இந்திய வம்சாவளியினரை குறிவைத்து இனவெறி கருத்துகள் பதிவிடப்பட்டது. இது சிங்கப்பூரில் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமரும், மூத்த அமைச்சரும் தனித்தனியாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    நேபாளம்-திபெத் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1000+ பேர் உயிரிழந்தனர். இதில் சிங்கப்பூரை சேர்ந்த 9 பேர் மாயமாகி இருந்தனர். இது தொடர்பாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சில நெட்டிசன்கள் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அதேபோல ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்த முதலீடு தொடர்பாகவும் அவதூறான கருத்துகள் பதிவிடப்பட்டன.

    Advertisement

    சிங்கப்பூர்

    இது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிவான இந்த கருத்துகள் வெட்கக்கேடானவை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று மூத்த அமைச்சர் கே. சண்முகம் கண்டித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நாம் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், நியாயமான வாதங்கள் என்று சொல்லிக் கொண்டு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான பாரபட்சத்தை கருத்துகளை அல்லது வெளிநாட்டினர் மீதான விரோதத்தையும் தூண்டும் கருத்துகளையும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

    Advertisement

    மோதமான கருத்துகள்

    சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துகளை சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இது ஒன்றும் சிங்கப்பூரின் கருத்து இல்லை. இதை சாதாரண ஆன்லைன் பேச்சு என்றும் நாம் புறக்கணிக்கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், அவை இயல்பான ஒன்றாக மாறி, நாட்டை பிளவுபடுத்தக்கூடும். இது தொடர்பாக அமைச்சர்களிடமும் ஆலோசனை நடத்தினேன்" என்றார். மேலும், சிங்கப்பூர் அரசு இது தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    நேபாளம்

    நேபாளம் மற்றும் திபெத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 9 பேர் மாயமாகினர்.. அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்கள். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் செட்டில் ஆனவர்களின் வாரிசுகள் ஆகும். இந்த துயரத்திலும் மாயமானவர்கள் "நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல" என்பது போன்ற பதிவுகள் பதிவாகி இருந்தது.

    Advertisement

    சிங்கப்பூர் உள்துறை அமைச்சகமும் சுமார் 20 இனவெறி கருத்துகளை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை செய்தி நிறுவனங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியான செய்திகளுக்கான கமண்ட்களாக பதிவிடப்பட்டிருந்தன.

    சிங்கப்பூர் முதலீடு

    அதேபோல சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான டெமாசெக்கின் சிஇஓ தில்ஹான் பிள்ளை சண்ட்ரசேகராவும் இணையவழி தாக்குதலுக்கு உள்ளானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், ஏர் இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக சிங்கப்பூர் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டெமாசெக் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடாவின் ஏர் இந்தியாவில் 25.1 சதவீத பங்குகளை வைத்துள்ளது. கடந்த மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் கூடுதல் முதலீட்டை செய்வதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்தது. தில்ஹான் பிள்ளை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதாலேயே ஏர் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டதாக இனவெறி கருத்துகள் பதிவிடப்பட்டன.

    Advertisement

    60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில் சுமார் 75 சதவீதம் பேர் சீனர்கள், 15 சதவீதம் பேர் மலேசியாவை சேர்ந்தவர்கள், சுமார் 9 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Singapore has strongly condemned racist and xenophobic comments targeting people of Indian origin on social media(இந்தியாவுக்கு எதிரான இனவெறி கருத்துகள் சிங்கப்பூர்): Singapore latest news in tamil.