சிங்கப்பூர்: சிங்கப்பூர் என்ன தான் ஒரு சொகுசான ஒரு வாழ்க்கையை நமக்கு கொடுத்தாலும் கூட அதற்கு மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருப்பதாகவே நெட்டிசன்கள் கூறு வருகிறார்கள். இதற்கிடையே வெறும் ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டில் வசிக்கும் இந்திய தம்பதி, தங்களுக்கு மாதம் ரூ.3 லட்சம் வரை செலவாவதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்காலம்!
சிங்கப்பூர் என்றவுடன் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்களும், சொகுசான வாழ்க்கை முறையும் தான். ஆனால், அதற்கு எவ்வளவு தொகையை ஒருவர் செலவிட வேண்டி இருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. இதற்கிடையே சிங்கப்பூரில் வசிக்கும் இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் கிருத்திகா ஜெயின் இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் தானும் தனது பாட்னரும் சிங்கப்பூரில் வசிக்கும்போது எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி அந்த தம்பதிக்கு மொத்த மாத செலவாக சுமார் 4,700 முதல் 4,900 சிங்கப்பூர் டாலர்கள் வரை ஆகிறதாம். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.01 லட்சம் முதல் ரூ.3.14 லட்சம் வரை ஆகும். சிங்கப்பூரில் அவர்களது மிக பெரிய செலவாக இருப்பது வீட்டு வாடகை தான். நகரின் பிரதான பகுதியில் உள்ள ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட்டில் வசிக்கும் அவர்கள், மாதம் 3,000 சிங்கப்பூர் டாலர்கள், அதாவது சுமார் ரூ.2.2 லட்சம் வாடகையாக செலுத்துவதாக கிருத்திகா தெரிவித்துள்ளார். அதாவது அந்த தம்பதியின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கு மேல் வீட்டு வாடகைக்கே செலவாகிறது. இது தவிர மளிகை பொருட்கள் மற்றும் வெளியில் சாப்பிடுவதற்காக மாதம் சுமார் 800 முதல் 1,000 சிங்கப்பூர் டாலர்கள் செலவாகிறதாம். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.75,000 ஆகும். இந்த தம்பதி வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை வெளியில் சாப்பிடுவதாகவும், மீதமுள்ள நாட்களில் வீட்டிலேயே உணவு சமைத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். மின்சாரம், தண்ணீர், இணையம் மற்றும் மொபைல் கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்கு மாதம் சுமார் 200 சிங்கப்பூர் டாலர்கள், அதாவது சுமார் ரூ.15,000 செலவாகிறதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல போக்குவரத்துக்காக மாதம் சுமார் 200 சிங்கப்பூர் டாலர்கள் செலவிடுகின்றனர். பெரும்பாலும் பொது போக்குவரத்தையே பயன்படுத்தும் இவர்கள், அவ்வப்போது மட்டுமே டாக்ஸியை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.. இது தவிர ஷாப்பிங், பொழுதுபோக்கு, சப்ஸ்கிரிப்ஷன்கள் மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் சுமார் 500 சிங்கப்பூர் டாலர்கள், அதாவது சுமார் ரூ.37,000 செலவாவதாக தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் வாழ்க்கை என்பது பார்க்க கவர்ச்சிகரமாக தெரிந்தாலும் கூட அதற்கு மிக பெரிய தொகையை செலவிட வேண்டி இருப்பதாக கிருத்திகா ஜெயின் தெரிவித்துள்ளார். இவ்வளவு செலவு செய்து சிங்கப்பூரில் வாழ்வது சரியானது என நினைக்கிறீர்களா என தனது பலோயர்ஸ்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பல்வேறு பதில்களை கொடுத்து வருகின்றனர். சிங்கப்பூரின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, வாழ்க்கை தரம் உள்ளிட்ட அம்சங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மக்களை ஈர்க்கிறது. அதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. ஆனால், இரண்டு பேர் வசிக்கவே இவ்வளவு செலவாவது பலருக்கும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக வீட்டு வாடகை இந்தளவுக்கு இருப்பது பலருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான்! கிருத்திகா பகிர்ந்துள்ள கணக்கின்படி, **ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான மாத பட்ஜெட்டில் சிங்கப்பூரில் ஒரு தம்பதியின் வாழ்க்கைச் செலவு அமைகிறது. அதிலும், வாடகை மட்டும் ரூ.2.2 லட்சம் வரை செல்வது குறிப்பிடத்தக்கது.**ரூ.3 லட்சம் செலவு
எவ்வளவு செலவாகிறது
நெட்டிசன்கள்
சிங்கப்பூர் வாழ்க்கை