ஒரு சின்ன தவறு.. தமிழருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட சிங்கப்பூர் நீதிமன்றம்.. என்ன நடந்தது!

  • சிங்கப்பூர்: தெற்காசிய நாடான சிங்கப்பூரில் நீதிமன்றத்தில் வேலை செய்து வந்த தமிழருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் நீதிமன்றத்தின் ரகசிய டாக்குமெண்டுகள் இருந்த லேப்டாப்பின் அகசஸை வெளிநபருக்கு அளித்து, அந்த டாக்குமெண்டுகளை ஆபத்தில் தள்ளிய குற்றச்சாட்டில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சிங்கப்பூரில் விதிகள் எல்லாமே மிக கடுமையாக இருக்கும். ஒரு சிறிய தவறு செய்தாலும் கூட அபராதம், சிறை என மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

    Advertisement

    தமிழர்

    சிங்கப்பூர் அரசு நீதிமன்றத்தில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், அந்நாட்டு அரசு வழங்கிய லேப்டாப்பை வெளிநபர் ஒருவரின் அக்சஸுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக சிங்கப்பூர் நீதிமன்றங்களுக்கு சொந்தமான 18,000க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ டாக்குமெண்ட் திருட்டுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டது.

    என்ன புகார்

    42 வயதான ஜனார்த்தனன் தமிழ் கோவன் மீது ரகசிய ஆவணங்களை பாதுகாக்க தவறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த நபர் ஒப்புக்கொண்டார். அரசு மற்றும் மாநில நீதிமன்றங்களுக்கு சொந்தமான ஆவணங்களை ஆபத்தில் தள்ளியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு அளித்த லேப்டாப்பில் அனுமதியின்றி மாற்றங்களை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    Advertisement

    எனினும், இந்த சம்பவத்தின்போது எந்த ஒரு ஆவணமும் உண்மையில் வேறு நபருக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், அந்த டாக்குமெம்டுகளை வெளிநபர் ஜெராக்ஸ் எடுக்கவும், அனுமதியின்றி அணுகவும் வாய்ப்பு ஏற்பட்டது. அதாவது நீதிமன்றத்தின் ரகசிய டாக்குமெண்டுகளை யார் வேண்டுமானாலும் அணுகும் சூழல் ஏற்பட்டது.

    என்ன நடந்தது!

    2025 ஆகஸ்ட் 4ம் தேதி ஒரு குறிப்பிட்ட தேர்வை ஜனார்த்தனன் எழுத முயன்றபோதுதான் இந்த சம்பவம் தொடங்கியது. அவரது பெர்சனல் லேப்டாப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சிங்கப்பூர் அரசு வழங்கிய லேப்டாப்பை பயன்படுத்தி தேர்வு எழுத முடிவு செய்தார். இருப்பினும், அரசு லேப்டாப்பில் இருந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் தேர்வை எழுத முடியவில்லை.

    Advertisement

    இதையடுத்து ஹரி பாலன் என்பவரிடம் அவர் உதவி கேட்டுள்ளார். இந்தியாவில் உள்ள ஹரி பாலனுக்கு, அரசு வழங்கிய லேப்டாப்பை தொலைவில் இருந்து இயக்குவதற்கான அனுமதியை ஜனார்த்தனன் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் எல்லாம் நடந்தபோது சிங்கப்பூர் நீதிமன்றங்களுக்கு சொந்தமான 18,016 டாக்குமெண்ட்கள் அவரது லேப்டாப்பில் இருந்துள்ளது. அதில் பல முக்கிய தகவல்கள் இருந்துள்ளது.

    சிறை

    இது தொடர்பாகவே விசாரணை நடத்தி ஜனார்த்தனன் தமிழ் கோவனை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். அரசு லேப்டாப்பை வெளியே இருந்து ஒருவர் அக்சஸ் செய்ய அனுமதி அளித்த குற்றத்தை ஜனார்த்தனனே ஒப்புக்கொண்டார். அந்த சூழலில் நீதிமன்ற டாக்குமெண்டுகள் ஜெராக்ஸ் அல்லது திருடவோ வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    Advertisement

    ஜனார்த்தனனின் பொறுப்பு மற்றும் அவரிடம் இருந்த முக்கியமான தகவல்களை கருத்தில் கொண்டு அவரது நடவடிக்கை தீவிரமானது என்று அரசு தரப்பு வாதிட்டது. அவரே தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நிலையில், அவரை குற்றவாளி என நீதிமன்றமும் அறிவித்தது. மேலும், ஜனார்த்தனனுக்கு 28 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தது.

    English Summary

    Indian IT worker who worked for Singapore’s State Courts has been sentenced to 28 weeks in prison(சிங்கப்பூரில் தமிழருக்கு சிறை தண்டனை): Tamil in Singapore got prison sentence.