சிங்கப்பூர்: இந்த காலத்தில் இளம் தம்பதிகளுக்கு இடையே விவகாரத்து வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக ஒரு முக்கியமான டேட்டா வெளியாகியுள்ளது. அதில் சிங்கப்பூர் நாட்டில் விவகாரத்து அதிகம் நடக்க எது காரணமாக இருக்கிறது.. இதற்கு பின்னணி என்பது மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் உலகின் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும். இதன் காரணமாகவே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் சிங்கப்பூர் செல்கிறார்கள். இதற்கிடையே சிங்கப்பூர் நாட்டில் அதிகரிக்கும் விவாகரத்து குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் 2025ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற முஸ்லிம் அல்லாத தம்பதிகளில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது 48.7 சதவீதம் பேர் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை என்பதையே விவாகரத்துக்கான முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் கள்ள உறவு காரணமாக விவாகரத்து பெற்றவர்கள் வெறும் 0.9 சதவீதம் மட்டுமே ஆகும் மறுபுறம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாகரத்துகளில் நிலைமை வேறுபட்டுள்ளது. அங்கு 21.5 சதவீதம் பேர் கேரக்டர் செட் ஆகவில்லை என்பதையே காரணமாக சொல்லியுள்ளனர். 18.4 சதவீதம் பேர் துரோகம் திருமணத்தை மீறிய உறவை திருமணம் முறிய காரணமாக தெரிவித்துள்ளனர். இந்த வேறுபாட்டிற்கு அங்குள்ள சட்ட நடைமுறைகள் வேறுபடுவதுதான் முக்கிய காரணமாகும். அதாவது சிங்கப்பூரில் முஸ்லீம் தவிர பிற மதங்களை சேர்ந்தோரின் விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்கிறது. அங்கு திருமணம் சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது என்பதை நிரூபிக்க ஆறு காரணங்களில் ஒன்றை சொல்ல வேண்டும். அதாவது கள்ள உறவு, கைவிடுதல், ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை, இருவரின் சம்மதத்துடன் 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்தல், சம்மதம் இல்லாமல் 4 ஆண்டுகள் பிரிந்து வாழ்தல், பரஸ்பர சம்மத விவாகரத்து ஆகிய 6 காரணங்களில் எதாவது ஒன்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதில் 2024ம் ஆண்டு தான் பரஸ்பர சம்மத விவாகரத்து என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அந்த ஆப்ஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மறுபுறம் முஸ்லிம் விவாகரத்துகள் ஷரியா நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. அங்கு குறிப்பிட்ட காரணங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குடும்ப நல நீதிமன்றங்களில் கள்ள உறவை நிரூபிப்பது மிகவும் கடினமானது. தனியார் விசாரணை அதிகாரிகள், போட்டோ, வீடியோக்கள் போன்ற வலுவான ஆதாரங்கள் தேவைப்படும். இதன் காரணமாகவே பலரும் கள்ள உறவு இருந்தாலும் கூட கேரக்டர் செட்க ஆகவில்லை என்ற ஆப்ஷனை தேர்வு செய்கிறார்களாம். அது நிரூபிக்க எளிதாக இருப்பதோடு, தேவையற்ற சட்ட சிக்கல்களையும் குறைக்கிறது. குடும்ப வன்முறை, கடுமையான வார்த்தைகளால் துன்புறுத்துதல், கட்டுப்படுத்தும் மனநிலை, மது அல்லது போதை பழக்கம், சூதாட்டம், குடும்பத்தை கவனிக்காதது ஆகியவை இதன் கீழ் வருமாம். விவாகரத்து வழக்கில் எந்தவொரு சர்ச்சையும் இல்லை என்றால்.. இதை நிரூபிக்க விரிவான ஆவணங்கள் பெரும்பாலும் தேவையில்லை. ஆனால் எதிர் தரப்பு இதை எதிர்த்தால் மெசேஜ், வங்கி பரிவர்த்தனை பதிவுகள், போலீஸ் புகார்கள், மருத்துவ அறிக்கைகள் அல்லது சாட்சிகளின் வாக்குமூலங்கள் போன்ற ஆதாரங்கள் தேவைப்படலாம். 2024ல் கொண்டு வரப்பட்ட பரஸ்பர விவகாரத்து என்பதையே இப்போது அங்கு அதிக பேர் தேர்வு செய்கிறார்கள். இதன் கீழ் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டிய தேவையில்லை. இதற்கு முன்பு பரஸ்பர சம்மதத்தோடு விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகள் கூட திருமணத்தை முடிக்க விரும்பும்போது, ஒருவர் மற்றொருவரின் மீது "ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை" போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அது தேவையில்லை.. வெறுமன பரஸ்பர விவகாரத்து என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். இதன் மூலம் நீதிமன்ற வழக்கில் கவனம் செலுத்தாமல் குழந்தைகளின் எதிர்காலம், சொத்து பிரிப்பு, பொருளாதார ஏற்பாடுகள் போன்ற முக்கிய விஷயங்களில் பிரியும் தம்பதிகளால் கவனம் செலுத்த முடிகிறது.விவாகரத்து
காரணம்
கடினம்
பரஸ்பர விவாகரத்து