சம்பளம் கூட இல்லை.. சிங்கப்பூரில் கதறும் இந்திய தொழிலாளர்கள்.. பிரபல இந்திய தொழிலதிபர் சிக்கினார்

  • சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல நிறுவனங்களை நடத்தி வந்த இந்திய தொழிலதிபர் ஒருவர், 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் இப்போது திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்கப்படாமல் பல தொழிலாளர்கள் சிரமப்பட்ட நிலையில், இந்த திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவை சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள், சிங்கப்பூர் நாட்டிற்கு அதிகம் செல்கிறார்கள். வேலை அல்லது பிஸ்னஸ் செய்ய சிங்கப்பூர் செல்லும் இந்தியர்கள் அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்று செட்டிலும் ஆகிவிடுகிறார்கள்.

    Advertisement

    சிங்கப்பூர் தொழிலதிபர்

    அப்படி சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தவர் ராமு பழனி வேலு. இவர் தான் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி இருக்கிறார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் இவர் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள ராமு, ஏர் கண்டிஷனிங், பிளம்பிங் மற்றும் கட்டுமானம் என மொத்தம் 7 நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.

    ராமுவின் நிறுவனங்களில் பணியாற்றிய மொத்தம் 407 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த சில மாதங்களாகவே ராமுவுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. நிலுவை சம்பளம் குறித்து ஊழியர்கள் சிங்கப்பூர் அரசிடம் புகார் அளித்துள்ளனர். இவர்களில் பலர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தொழிலாளர்கள் 2 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    சம்பளம்

    கடந்த 2025ஆம் ஆண்டிலேயே இந்த விவகாரம் முதலில் வெடித்துள்ளது. அவரது கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய 5 தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என ஊழியர் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு வாரத்துக்குள் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், பிரச்சினை மீண்டும் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தீவிரமடைந்தது.

    அவரது கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த மேலும் 4 ஊழியர்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளித்தனர். இந்த புகார்கள் பரிசீலனையில் இருந்தபோதே, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜூன் 22ஆம் தேதி சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றனர். தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    Advertisement

    விசாரணை

    இது ஒரு பக்கம் இருக்கும்போதே கடந்த ஜூன் 8ஆம் தேதி கட்டுமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியே வேண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தான் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. ஒரு பக்கம் ராமுவை சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்த முயன்றுள்ளனர். இருப்பினும், அப்போது ராமு சிங்கப்பூரில் இல்லை என்பதும் தெரியவந்தது.

    இதனால் தொழிலாளர்கள் மேலும் பதற்றமடைந்தனர். இருப்பினும், ராமு கடந்த ஜூன் 26ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினார். அதன் பின்னர் சிங்கப்பூர் அரசின் விசாரணைக்கு அவர் ஒத்துழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே கடந்த ஜூலை 9ம் தேதி தான் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி ராமு சிங்கப்பூர் அரசிடம் விண்ணப்பித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி அவருக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    Advertisement

    சிங்கப்பூர் சட்டம்

    சிங்கப்பூர் சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க தவறும் முதலாளிகளுக்கு 3,000 முதல் 15,000 அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி, அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 400 பேருக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற போதிலும் இவர் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை பாயும் என்பது தெளிவாக தெரியவில்லை.

    English Summary

    An Indian businessman in Singapore has been declared bankrupt after his companies allegedly failed to pay salaries(சிங்கப்பூரில் திவால் ஆன இந்திய தொழிலதிபர்): Singapore Indian Businessman latest news in tamil.