சிங்கப்பூர்: மரநாய் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் 'Kopi Luwak' என்று தான் உலகின் நம்பர் 1 விலையுயர்ந்த காபி!....நம்ப முடிகிறதா? இதைக் கேட்ட பிறகும் காபி குடிக்க தோணுதா என்றுநெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை காண முடிந்தது. உண்மையில் இப்படியும் காபி தயாரிப்பார்களா என்று தேடிய போது, சில ஆச்சரியமான உண்மைகள் தெரியவந்தது. அவற்றை பார்ப்போம்.
உங்களுக்கு நான் சொல்வது மிகவும் அருவருப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே உலகின் மிக விலை உயர்நத காபி என்றால் அது 'கோப்பி லூவாக்' தான். இதனை ஆங்கிலத்தில் Kopi Luwak அல்லது 'Civet Coffee' என்று அழைப்பார்கள்.
கோப்பி லூவாக் காப்பி எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா? நம்மூரில் காபி பயிரிடப்பட்டிருக்கும். அந்த பழத்தின் காபி கொட்டைகளை காயவைத்து அரைத்து பயன்படுத்துவோம். ஆனால் கோப்பி லூவாக் என்பது மரநாய் கழிவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆசிய மரநாய் என்று அழைக்கப்படும் Civet Cat என்று அழைக்கப்படும் மரநாய்கள் காபித் தோட்டங்களில் உள்ள மிகவும் உயர்தரமான, நன்றாகப் பழுத்த காபிப் பழங்களை மட்டுமே தேடித் தேடி சாப்பிடும். அப்படி சாப்பிட்ட பழத்தின் வெளிப்பகுதி மரநாயின் வயிற்றில் செரிமானம் ஆகிவிடும், உள்ளே இருக்கும் 'காபி கொட்டைகள்' செரிமானம் ஆகாமல் முழுதாகவே அதன் கழிவு வழியாக வெளியே வந்துவிடும். அப்படி வருவதற்கு முன்பு என்ன நடக்கும் என்றால், மரநாயின் வயிற்றில் உள்ள என்சைம்கள் இந்த காபி கொட்டைகளுடன் வினைபுரிந்து, காபியில் இருக்கும் கசப்புத் தன்மையைக் குறைத்துவிடுகிறது. அத்துடன் ஒருவிதமான பிரத்யேக சுவையையும் நறுமணத்தையும் நிச்சயம் தருமாம். தொடர்ந்து மரநாயின் கழிவுளை சேகரிக்கும் தொழிலாளர்கள், இந்த கொட்டைகள் பலமுறை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்துகிறார்கள். பின்னர் சுடு தண்ணீரில் சுத்தம் செய்து, கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. அதன்பிறகு வழக்கமான பார்முலாவிற்கு செல்லும்.. காயவைத்து வறுக்கப்பட்டு பிறகே காபித் தூளாக பொடி செய்து மாற்றப்படுகிறது. மரநாயின் கழிவில் இருக்கும் காபி கொட்டைக்கு இவ்வளவு டிமாண்ட் ஏன்.. இதை கேட்டு காபி குடிக்க எப்படி பலருக்கும் மனசு வருகிறது என்று கேட்கிறார்களே. அங்குதான் விஷயமே இருக்கிறது. இந்த கோப்பி லூவாக் காப்பி காபி பிரியர்களும் , பணக்காரர்களும் அபூர்வமான சுவை மற்றும் அந்தஸ்துக்காக தேடிப்பிடித்து குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.கோப்பி லூவாக் காப்பி எப்படி தயாரிக்கப்படுகிறது
இதை கேட்டு காபி குடிக்க எப்படி பலருக்கும் மனசு வருகிறது