டாய்லெட் போயிட்டு தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் குற்றம்.. சிங்கப்பூரின் இந்த வினோத ரூல்ஸ் தெரியுமா

  • சிங்கப்பூர்: உலகிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது. அந்த நிலையை அடைய சிங்கப்பூரில் உள்ள மிக கடுமையான விதிகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. சில விதிகள் நமக்கு வினோதமாக தோன்றினாலும் கூட அது சிங்கப்பூருக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. அப்படி அங்கு இருக்கும் 10 முக்கியமான விதிகள் குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    சிங்கப்பூர்... உலகின் மிகவும் சுத்தமான, பாதுகாப்பான, ஒழுங்குமுறை கொண்ட நாடுகளில் ஒன்று. இந்தியர்கள் அதிகம் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலிலும் இது முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால், இந்த அழகான நாட்டுக்கு செல்லும் முன் அங்குள்ள கடுமையான சட்டங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

    Advertisement

    இந்தியாவில் சாதாரணமாக கருதப்படும் சில செயல்களே சிங்கப்பூரில் அபராதம், சிறை தண்டனை அல்லது சில நேரங்களில் பிரம்படி போன்ற கடுமையான தண்டனைகளுக்கு காரணமாக அமையலாம். அப்படி அங்குள்ள 10 முக்கிய சட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

    1. பூமருக்கு தடை

    பூமர் எனப்படும் சூயிங் கம் விற்பனைக்கு சிங்கப்பூரில் கடுமையான கட்டுப்பாடு உள்ளது. பொது இடங்களில் பூமரை அப்படியே துப்புவதால் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லி சிங்கப்பூரில் 1992 முதல் இதற்கு கட்டுப்பாடு இருக்கிறது. ரயில் நிலையங்கள், லிப்ட் உள்ளிட்ட பொது சொத்துகளை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். சிங்கப்பூரில் உங்களால் எங்கும் சூயிங் கம் வாங்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து எடுத்து வருவோரும் அதை சாப்பிட்டுவிட்டு, முறையாக அப்புறப்படுத்த வேண்டும். எச்சரிக்கையின்றி தூக்கி எறிந்தால் அபராதம் விதிக்கப்படும். .

    Advertisement

    2. போதை பொருள்

    சிங்கப்பூரில் போதை பொருளுக்கு மிக கடுமையான சட்டங்கள் உள்ளன. உலகிலேயே கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது.. சிறிய அளவு போதைப்பொருள் வைத்திருந்தாலும் பல ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனையும் கூட வழங்கப்படுகிறது.

    3. கடுமையான குற்றம்

    சுவர் மீது எழுதுவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்கள் அங்கு குற்றமாக கருதப்படும். இந்தியாவிலும் கூட பெரும்பாலான பகுதிகளில் இது குற்றம் தான் என்றாலும் பெரியளவில் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், சிங்கப்பூரில் இதற்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும். அபராதம், சிறை தண்டனை மற்றும் பிரம்படி கூட வழங்கப்படலாம்.

    Advertisement

    4. புகைபிடிப்பது

    சிங்கப்பூரில் நினைத்த இடத்தில் எல்லாம் புகைபிடிக்க முடியாது.. அங்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே புகைபிடிக்க அனுமதிக்கப்படும். மின் சிகரெட் மீதும் கூட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

    5. பொது கழிப்பறை

    இதுதான் அங்கு வினோதமான சட்டமாக உங்களுக்கு தெரியலாம். அதாவது சிங்கப்பூரில் பொது கழிப்பறையை பயன்படுத்திய பிறகு ஃப்ளஷ் செய்யாமல் வெளியேறுவது சட்டவிரோதமாகும். கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதையும் அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    6. சாலை விதிகள்

    அங்கு சாலையை நீங்கள் நினைத்த இடத்தில் எல்லாம் கடக்கக்கூடாது. குறிப்பிட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் சாலையை கடப்பது அபராதத்துக்கு வழிவகுக்கும். பொதுவாக 20 முதல் 50 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,300 முதல் ரூ.3,200) வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    Advertisement

    7. போராட்டம் நடத்த முடியாது

    பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் போலீசாரின் முன் அனுமதி கட்டாயம் தேவை! அனுமதியில்லாத போராட்டங்களில் ஈடுபட்டால் கைது செய்யப்படலாம்.

    8. எச்சில் துப்ப தடை

    பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் பொது இடங்களில் துப்புவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கும் அபராதம் விதிக்கப்படும். நம்மை ஊரை போல பெயரளவில் மட்டும் அபராதம் இருக்காது. உண்மையாகவே பெரிய தொகையை அபராதமாக போட்டுவிடுவார்கள்.

    9. மது அருந்த கட்டுப்பாடு

    லைசன்ஸ் பெற்ற பார்கள் மற்றும் உணவகங்களைத் தவிர, இரவு 10.30 மணிக்குப் பிறகு பொது இடங்களில் மது அருந்துவது சட்டவிரோதமாகும்.

    Advertisement

    10. வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது

    அரசின் அனுமதியின்றி குரங்கு, பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவளிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.. முதல் முறை விதிமீறினால் SGD 5,000 வரை, மீண்டும் செய்தால் SGD 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

    English Summary

    Singapore is famous for its cleanliness and strict enforcement of laws(சிங்கப்பூரில் உள்ள வினோத சட்டங்கல்): Singapore trip Indians latest news in tamil.