இலவச பேருந்து பயணம்.. தங்கம் கொடுப்பதும் லஞ்சம்தான்! சிவகங்கையில் சீமான் ஆவேசம்

  • சிவகங்கை: இலவச பேருந்து பயணம்.. தாலிக்கு தங்கம் கொடுப்பதும்.. தாய்மாமன் தங்கம் மோதிரம் கொடுப்பதும் லஞ்சம்தான் என சீமான் பேசினார். அன்பளிப்பு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் மக்கள் காசை வாங்கி மக்களுக்கே கொடுக்கிறோம். இது வார்த்தை லஞ்சம்.. என்று சீமான் கூறியுள்ளார்.

    Advertisement

    சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    Advertisement

    சீமான் பேசியதாவது:- அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததா இல்லையா?.. நீங்க ஊழல், லஞ்சம் என்று சொல்வதை எதனடிப்படையில் சொல்கிறார்கள். எது லஞ்சம்? எது ஊழல்? ரொக்கமாக கொடுப்பதற்கு பெயர் தான் லஞ்சம் என்றால் நான் அதற்கு பதில் சொல்ல முடியாது. மாதம் ரூ.2,500 தருகிறேன்.. தாலிக்கு தங்கம் தருகிறேன். அண்ணன் சீர் தருகிறேன். தாய் மாமன் தங்கம் மோதிரம் ஒரு கிராம் மோதிரம் தருகிறேன். 6 சிலிண்டர்கள் தருகிறேன்.. இது எல்லாம் லஞ்சமா? இல்லையா?

    இதை எல்லாம் யார் காசில் இருந்து கொடுக்குறீங்க.. அன்பளிப்பு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் மக்கள் காசை வாங்கி மக்களுக்கே கொடுக்கிறோம். இது வார்த்தை லஞ்சம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பேன்.. கொடுப்போம் என்பது அரசின் வேலை.. ஆனால் வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் கொடுப்பேன் என்று சொல்வது லஞ்சம்.. வார்த்தை லஞ்சம்..

    Advertisement
    அரிசி வாங்கவே அல்லல்படும்போது.. விமான எரிபொருளுக்கு வரிச்சலுகையா? - தவெக அரசுக்கு சீமான் கேள்வி

    நான் அப்படி சொல்லவில்லை. நீங்கள் அப்படி சொல்கிறீர்கள். எல்லாமே ஒன்னு தான்.. பணமாக கொடுத்தால் தான் லஞ்சம்.. ஒரு கோடி, நூறு கோடி என கொடுத்தால் தான் லஞ்சம் என சொல்கிறீர்கள். சரி நான் ஒன்று கேட்கிறேன். தம்பி ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் எழுந்து நின்று, உதயநிதி ஸ்டாலினை பார்த்து 900 கோடியை நீங்க மார்டினிடம் இருந்து வாங்குனீர்களா? இல்லையா? என்று கேட்டாரா இல்லையா?

    அதை கொடுத்த உங்க மாமாகிட்ட தான் கேட்க வேண்டும் என உதயநிதி சொல்கிறார்.. ஏன் வாங்குனீங்க என அவர் கேட்கிறார்.. ஏன் கொடுத்தீங்க என இவர் கேட்கிறார்.. அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவராவது எழுந்து 900 கோடி ரூபாய் எங்க இருந்து வந்தது, எதற்காக கொடுத்தீங்க என கேட்டார்களா..

    Advertisement
    ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசு! ரூ.16800 வரை போனஸ்! சிஎம் விஜய் சர்ப்ரைஸ்!

    விஜய் ஒதுக்கிய தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்துக்கு 755 கோடி தான் ஒதுக்கியிருக்காரு.. அண்ணன் சீருக்கு 760 கோடி தான் ஒதுக்கியிருக்காரு.. ஒரு திட்டத்தினுடைய நிதி எவ்வளவு ஒதுக்கப்படுகிறதோ, அதை விட சற்று கூடுதலாக 900 கோடியை வாங்குனதாகவும் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். ஒரு தனி முதலாளி, அதிகாரத்தில் இருக்கிற அரசுக்கு 900 கோடி ரூபாயை ஏன் கொடுத்தார்?..

    அவரிடம் இருந்து எதற்காக 900 கோடி வாங்கப்பட்டது. இதற்கு யார் கிட்ட பதில் இருக்கு.. கொடுத்த இவங்க பதில் சொல்லுவாங்களா.. இல்லை வாங்கின இவங்க பதில் சொல்லுவாங்களா? அவையில் இருந்த யாரும் கூட கேள்வி கேட்கவில்லையே ஏன்?.. எல்லாரும் வாங்கி இருக்காங்க.. ஆமாவா, இல்லையா.. இப்போ நான் கேட்கிற கேள்வியை அவையில் கேட்டிருக்க வேண்டுமா இல்லையா? எதுக்காக அரசுக்கு 900 கோடியை கொடுத்தீங்க.. என்ன நோக்கத்திற்காக கொடுத்தீங்க.. எந்த நலத்திட்டத்திற்காவது என்று சொல்லி கொடுக்கப்பட்டதா?" என்று கூறினார்.

    English Summary

    Seeman has stated that free bus travel, the provision of gold for *thali* (mangalsutra), and the tradition of a maternal uncle gifting a gold ring—all amount to bribery. He argued that these cannot be termed as 'gifts,' because the government is merely taking money from the people and giving it back to them. Seeman described this as a form of "verbal bribery."