காரைக்குடியில் இன்ஸ்டா பிரபலங்கள் இடையே கள்ளக்காதல்.. சாணியை கரைத்து ஊற்றியதால்.. இப்படி ஆகிடுச்சே

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் ஏற்பட்ட மோதலில், இளம்பெண் மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்கமாற்றால் தாக்கியதாக வீடியோ வைரலான் நிலையில் போலீசார் இருவரை கைது செய்து மேலும் இதுவரை தேடி வருகின்றனர். ஒரு நிமிடம் உணர்ச்சிவப்பட்டு செய்த சம்பவம், இன்ஸ்டா பிரபலங்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தையுமே பாதித்துள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அபி (23) இன்ஸ்ட்டா பிரபலமான இவர் கல்லல் எழுமாப்பட்டியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் கவியரசனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கவியரசனுக்கும் காரைக்குடியைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் அபியைப் பிரிந்து ஜெயஸ்ரீயுடன் அவர் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் ஆத்திரமடைந்த அபியும், சகோதரி அருணா தேவி (27) பிரியா (30) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கடந்த 20 ம் தேதி காரைக்குடி 100 அடி சாலையில் ஜெயஸ்ரீயைச் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜெயஸ்ரீ மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்கமாறு கையால் தாக்கி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர்

    உங்கள் வீட்டு மின் கட்டணம்.. கரண்ட் பில்லை நீங்களே மொபைலில் உருவாக்கலாம்.. மின்வாரியம் விளக்கம்

    இதுகுறித்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு போலீசார் அபி மற்றும் அவரது சகோதரி அருணா தேவி பிரியா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் இன்ஸ்டா பிரபலம் மீது சகோதரிகள் தாக்கிய வீடியோ வெளியாகி வைரல் ஆன நிலையில் வீடியோவை வெளியிட்டதாக சந்துரு என்ற வாலிபரையும் மற்றும் 30 வயதான பிரியாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே இன்ஸ்டா பிரபலம் மீது சானியை கரைத்து ஊற்யி பிரபலங்கள் வைத்த வேண்டுகோளில் யாரும் வீடியோவை ஷேர் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு நிமிடம் உணர்ச்சிவப்பட்டு செய்த சம்பவம், இன்ஸ்டா பிரபலங்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தையுமே பாதித்துள்ளது. திருமணம் செய்துகொண்ட பெண் அல்லது ஆண், தனது கணவர் அல்லது மனைவி, இன்னொருவருடன் உறவு வைத்திருப்பதாகத் தெரியவரும்போது, பாதிக்கப்பட்ட துணைக்கு கோபம், அவமானம், மனவேதனை, குடும்பம் குறித்த அச்சம் ஏற்படுவது இயல்பானவை. ஆனால் அந்த கோபத்தின் அடிப்படையில் உணர்ச்சி ரீதியாக எடுக்கப்படும் முடிவுகள் அவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மோசமாகவே பாதிக்கும்.

    Advertisement
    கொடைக்கானல் - தேனி சாலை துண்டிப்பு.. அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையின் நிலை என்ன?

    கள்ளக்காதலால் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது ஆண்கள் என்ன செய்ய வேண்டும்.: கோபத்தில் துணையை தனியாகச் சந்திப்பது அல்லது பலருடன் சென்று கேள்வி கேட்பது போன்றவை பிரச்சனையை தீவிரமாக்கவே செய்யும். பலர் முன்னிலையில் அம்பலப்படுத்தி அவமானப்படுத்துவதை விட, ஆதாரங்களை சேகரித்து விவகாரத்து பெறலாம். குழந்தைகளின் நலன், பராமரிப்புத் தொகை, குடும்பச் சொத்து போன்ற உரிமைகள் குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசித்து சரியான முடிவெடுக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியில் பரப்ப வேண்டாம். திருமண உறவில் ஏமாற்றப்பட்டதாக உணரும் பெண் அல்லது ஆணிடம், "இதையெல்லாம் பொறுத்துக்கொள்" என்று கூறுவது சரியல்ல. அவருக்கு உறவைத் தொடர வேண்டுமா, பிரிய வேண்டுமா என்பதை அவர் தான் முடிவெடுக்க வேண்டும். இது உண்மையில் சிக்கலான விவகாரம்.இதுபற்றி விவாதங்கள் அதிகம் தேவை.சட்டம் இதற்கு என்ன தீர்வு தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கருத்துக்களை பகிருங்கள்.

    English Summary

    What was the outcome of the clash between Instagram celebrities that took place in the middle of the road in broad daylight in Karaikudi?. Case registered against four individuals—including sisters—who poured dissolved cow dung over a woman and assaulted her with a broom.