காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் பெண்ணின் சந்தேகம்.. நைட்டி ஸ்டாக்கர் மொபைலை பார்த்தால் போலீசுக்கு ஷாக்

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு ஆபாச பேர்வழி போலீசில் சிக்கி உள்ளார்.. இவரை சிக்க வைத்தது ஒரு இளம்பெண்.. இப்பயொரு சம்பவம் நடந்ததுமே உடனடியாக ஆக்‌ஷன் எடுத்துள்ளனர் போலீசார்.. ஆனால் போலீசுக்கே ஷாக் தரும்படியான காரியத்தை இந்த நபர் செய்திருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம். அதை பற்றி விரிவாக இங்கே பார்ப்போம்..!!!

    Advertisement

    காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், அங்கிருந்த கடை வீதிக்கு தனது அம்மாவுடன் சென்றிருந்தார்.. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைவீதியில் நடந்து வந்தார்.. அப்போது, யாரோ ஒரு நபர் பின்னாடியே தொடர்ந்து வருவதை அந்த பெண் கவனித்தார்..

    Advertisement

    காரைக்குடி நைட்டி ஆசாமி

    பிறகு கடைக்கு சென்றால், அங்கேயும் ஒரு செல்போனில் பேசுவதுபோல் நின்றுகொண்டு, மற்றொரு செல்போனில் ஆபாசமான கோணங்களில் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததார்..

    உடனே அந்த நபரிடம், "என்ன பண்றீங்க.. ஏன் வீடியோ எடுக்குறீங்க?" என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அதற்கு அந்த நபர், "ஒழுங்கா இடத்தை காலி பண்ணிட்டு போயிடு... இல்லாட்டி இந்த வீடியோவை சோஷியல் மீடியாவுல போட்டுடுவேன்... போலீசுக்கு போனால் கொன்னுடுவேன்" என்று பகிரங்கமாகவே மிரட்டியதாக கூறப்படுகிறது..

    பள்ளத்தூர் போலீஸ் அதிரடி

    ஆனால் எதற்கும் அஞ்சாத அந்த பெண் போலீசுக்கு சென்று இதுகுறித்து புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளத்தூர் காவல்துறையினர், அங்கு சுற்றித் திரிந்த அந்த நபரை பிடித்து சுற்றி வளைத்து பிடித்தனர்.. அவரிடம் இதுகுறித்து விசாரித்தனர்..

    Advertisement

    சம்பந்தப்பட்டவர் கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (45) என்பது உறுதியானது. அவரிடமிருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் சோதனையிட்டனர்.. அப்போதுதான் பெரிய ஷாக் ஒன்று போலீஸூக்கு காத்திருந்தது.

    100 ஆபாச வீடியோக்கள்

    பள்ளத்தூர், கானாடுகாத்தான், உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகள், பெண்கள் அதிகமாக கூடும் இடங்கள் என எங்கெல்லாம் பெண்கள் இருக்கிறார்களோ, அவர்களை மறைந்திருந்து ஆபாசமாக வீடியோ எடுத்து வருவதையே செந்தில்குமார் வேலையாக வைத்திருந்தது தெரியவந்தது.. குறிப்பாக நைட்டி அணிந்து வரும் பெண்களை அதிகமாக வீடியோ எடுத்துள்ளாராம்.. கல்லூரி மாணவிகளை அனுமதியின்றி ஆபாசமான கோணங்களில் ரகசியமாக வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    Advertisement

    இப்போதைக்கு செந்தில்குமாரின் 2 செல்போன்களிலும் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ வீடியோக்கள், போட்டோக்களை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன..

    விருதுநகர் போலீஸ் பேரதிர்ச்சி

    இதையடுத்து, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பள்ளத்தூர் காவல்துறையினர், செந்தில்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து, அவற்றை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டாரா, அல்லது பாலியல் துஷ்பிரயோகங்களுக்குப் பயன்படுத்தினாரா என்ற கோணத்திலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

    இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் செந்தில்குமார், தினமும் கல்லூரி, பள்ளிக்கூடங்ங்கள், ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களுக்கு சென்று பெண்களை இதுபோன்ற ஆபாச படங்கள், வீடியோ எடுத்து ரசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்...இவ்வாறு 100-கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்துள்ளார்.

    Advertisement

    இவரது இந்த கேவலமான செயலை அறிந்த அவருடைய மனைவி செந்தில்குமாரை கண்டித்துள்ளார்.. ஆனால், அவரது பேச்சை செந்தில்குமார் கேட்கவில்லை.. இதனால் மனம் நொந்து போன மனைவி, விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார்.. அப்போதும் செந்தில் குமார் அடங்காததால், அவரை விட்டு பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Karaikudi Nighty Stalker: sivagangai Man Arrested After Shocking Mobile Phone Evidence