விலைவாசியை குறைங்க.. ரோட்டில் புரண்டு தர்ணாவில் ஈடுபட்ட பெண்! விஜய் கண்டுகொள்வாரா?

  • சிவகங்கை: தமிழ்நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, வெல்லம் என எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறியிருக்கிறது. இந்நிலையில் சிவகங்கையில் பெண் ஒருவர் ரோட்டில் புரண்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார்.

    Advertisement

    விலைவாசி உயர்வு ஏதோ சிவகங்கையில் மட்டும் இருக்கும் பிரச்சனை கிடையாது. தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது. உதாரணத்திற்கு அரிசி விலையை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்த விலைக்கும் இப்போது இருக்கும் விலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

    Advertisement

    மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை ரூ.40,50,60 என விற்கப்பட்ட அரிசி, தற்போது ரூ.70,80,90 என விலை எகிறியிருக்கிறது. தினக்கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள், விவசாய கூலிகள், ஊபர், ரேபிடோ ஓட்டுநர்கள், தற்காலிக ஊழியர்கள் இப்படியான சாமானிய மக்களால் இவ்வளவு விலை கொடுத்து அரிசியை வாங்க முடியவில்லை. பெரும்பாலான மக்கள் சாமானியர்கள் என்பதால், விலையுயர்வு மொத்த தமிழகத்தையும் பாதித்திருக்கிறது. அரிசிக்கு மட்டுமே இந்த நிலைமை! மற்ற பொருட்களின் விலை உயர்வும் மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது.

    ஆனால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

    Advertisement

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனில், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு அரசு என்ன பிளான் வைத்திருக்கிறது? அரசு வேலை வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறதா? அப்படி எதுவும் தெரியவில்லை. ஆட்சிக்கு வந்த புதுசில் மின்சாரத்துறை குறித்து வெள்ளை அறிக்கை விட்ட அமைச்சர் நிர்மல் குமார், காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பாசிட்டிவாக பேசியிருந்தார். ஆனால், இப்போது வரை அப்படியான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

    மற்ற துறைகளிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் அப்படியே இருக்கின்றன. அது எதுவும் இன்னும் நிரப்பப்படவில்லை. மாநில அசுரதான் இப்படி எனில், மத்திய அரசும் தன் பங்குக்கு இறங்கி தீயாய் வேலை பார்த்திருக்கிறது. முன்னாடி மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கிராமத்தில் உள்ள மக்களிடத்தில் பணப்புழக்கம் இருந்தது. ஆனால், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக.. இப்போதெல்லாம் 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு.. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மற்ற பொருட்களின் விலை உயர்வு இப்படி எல்லாம் சேர்த்து மக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது.

    Advertisement

    விஜய் பல வாக்குறுதிகளை கொடுத்து முதலமைச்சராக வந்திருக்கிறார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே பாதி பிரச்சனைகள் முடிந்துவிடும். ஆனால், அதையெல்லாம் எப்போது நிறைவேற்றுவார்? என்பதே கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    price rise: Across Tamil Nadu, the prices of all essential commodities—including rice, lentils, cooking oil, sugar, and jaggery—have skyrocketed. Against this backdrop, a woman in Sivaganga staged a protest by rolling on the road, demanding that the rising cost of living be brought under control.