சிவகங்கை அருகே பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! 12 மணி நேரத்தில் 3 பேர் கைது!

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன், மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    சிவகங்கை அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த மதன் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரட்டைக் கொலை வழக்கிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    கடந்த 7ஆம் தேதி சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த மதன், இன்று ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்ததாகக் கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் மதனை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார், மதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகங்கை ரேஷன் கடைக்குள்ளேயே பலாத்காரம் செய்த ஊழியர்! பாவம் கணவனை இழந்த அந்த பெண்! மானாமதுரை கொடுமை
    Advertisement

    மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக மானாமதுரைச் சேர்ந்த பாலமுருகன், பாபு, பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த 12 மணி நேரத்தில் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால்தான் இந்த கொலை ஏன் நடந்தது என தெரியவரும். இந்த கொலையில் இவர்களுக்கு மட்டும்தான் தொடர்பா? இல்லை வேறு யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சுள்ளான் மதனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது 200-க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சுள்ளான் வீட்டிற்கு சென்றதால் பதற்றம் நிலவி வருகிறது.

    Advertisement

    வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்த பிரபல ரவுடி விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Rowdy was murdered near Sivagangai District when he was coming to watch Manju virattu.