20% கமிஷன் தந்தால் தான் பணி! லஞ்சம் கேட்கும் சிவகங்கை தவெக பெண் எம்எல்ஏ.. ஒப்பந்ததாரர் சங்கம் புகார்

  • சிவகங்கை: ''சிவகங்கை தவெக பெண் எம்எல்ஏ குழந்தை மணி அரசு பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்.'' என்று சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து யூனியன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

    Advertisement

    இதுபற்றி சிவகங்கை மாவட்டம் பஞ்சாயத்து யூனியன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தினர் பொருளாளர் ஜெகன் கூறுகையில், ''சிவகங்கையில் விபி - ஜி ராம் ஜி என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தவெக நிர்வாகிகளுக்கு வழங்க சிவகங்கை எம்எல்ஏ குழந்தை மணி முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது.

    Advertisement

    இதனால் உடனடியாக அவரை சந்தித்து பணிகளை பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்கும்படி கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் தவெகவினருக்கு ஒதுக்குவதில் உறுதியாக உள்ளது. 20 சதவீத கமிஷன் வாங்கி கொண்டு பணிகள் ஒதுக்கப்படுகிறது.

    அவர் எங்களை அவமானப்படுத்தி அந்த இடத்தை விட்டு வெளியேற்றினார். இங்குள்ள ஒப்பந்ததாரர்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள். இதற்கு முன்பு ஆளும்கட்சியாக இருந்தவர்கள் அனைவருக்கும் டெண்டர் வழங்கினர். தனது கட்சியினருக்கு மட்டும் டெண்டர் வழங்கவில்லை. ஆனால் தற்போது புதிய காலசாரத்தை கொண்டு வந்துள்ளனர்'' என்றார்.

    தற்போது தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளில் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் பஞ்சாயத்து கிளர்க் தலைமையில் நிர்வாகம் நடந்து வருகிறது. ஒரு பணியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றால் டெண்டர் மூலமாக பஞ்சாயத்து கிளர்க் வழியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    English Summary

    "Kulanthai Mani, a woman MLA from the TVK (Tamizhaga Vetri Kazhagam) in Sivaganga, demands a 20 percent commission for awarding government contracts," alleged members of the Sivaganga District Panchayat Union Registered Contractors' Welfare Association.