தவெக ஆட்சியும் சீனா மூங்கில் விதையும்.. டி.கே. பிரபு சொன்ன குட்டி ஸ்டோரி

  • சிவகங்கை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தவெக ஆட்சியை பிடித்ததை பார்த்து நாடே ஆச்சர்யப்பட்டது. விஜய் முதலமைச்சராகி மூன்று மாதங்களாகிவிட்டன. இந்நிலையில் தவெக ஆட்சியை பிடித்தது எப்படி என்று சீன மூங்கில் விதை கதையுடன் ஒப்பிட்டு அமைச்சர் டி.கே. பிரபு விளக்கியுள்ளார்.

    Advertisement

    சிவகங்கையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் அமைச்சர் டி.கே. பிரபு பேசுகையில், "ஒரு கிராமத்தில் விவசாயி சீன மூங்கில் விதையை விதைத்தார். பயனுள்ள விதையை போடாமல் ஏன் மூங்கிலை விதைத்தீர்கள் என அவரிடம் எல்லாரும் கேட்டனர். மூங்கில் தேவை தானே என சொல்லி அவர் விதைத்தார். ஒரு வருடமாகியும் ஒரு இலை கூட வரவில்லை. இந்நேரம் வேறு விதை போட்டிருந்தால் வளர்ந்திருக்கும் மற்றவர்கள் கூறினர். விவசாயி எதுவும் கூறாமல் பொறுமையுடன் இருந்தார்.

    Advertisement

    சீன மூங்கில் விதை

    3 வருடங்களாகியும் ஒரு இலை கூட வரவில்லை. அப்போதும் அந்த விவசாயி மனசு விடவில்லை. 5 வருடங்களானது. 5வது வருடத்தில் ஆறே வாரங்களில் மூங்கில் 90 அடி உயரத்துக்கு வளர்ந்தது. அது ஒரு காடாக மாறிவிட்டது. அப்போதுதான் மற்றவர்களுக்கு புரிந்தது, இதற்கு தான் இவ்வளவு காலம் காத்திருந்தாயா என விவசாயியிடம் கேட்டனர். அந்த 5 வருடம் மூங்கில் செடி வெளியில் வளராவிடினும் கீழே வளர்ந்து கொண்டிருந்தது.

    90 அடி மரம் வலுவாக நிற்க வேண்டுமானால் கீழே வேர் உறுதியாக இருக்க வேண்டும். இன்று பலரும் முதலமைச்சர் விஜய் திடீரென கட்சி ஆரம்பித்தார், 2 வருடங்களில் ஆட்சியை பிடித்துவிட்டார் என கூறுகின்றனர். அப்படி எல்லாம் இல்லை. 30 வருடங்களாக ரசிகர் நற்பணி மன்றம், மக்கள் இயக்கம் மூலமாக சேவை செய்தார். தளபதியும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் 30 வருடங்களாக மக்களுக்கு சின்ன சின்னதாக முடிந்த சேவைகளை செய்தனர்.

    Advertisement

    அதையும் கவனிங்க

    மரத்துக்கு எப்படி வேரோ, அப்படி மக்கள் இயக்கம் மூலம் வளர்த்து ஆட்சியை பிடித்துள்ளோம். கட்சி ஆரம்பித்த பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் பார்க்கிறார்கள். அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை பார்க்கவில்லை. அந்த காலத்தில் இருந்தே மக்கள் பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறார். அதனால் தான் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். கனிமவளங்களை அண்டை மாநிலம் கொண்டு செல்வதற்கு விதித்த தடையை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

    இப்படி மக்களை மகிழ்ச்சிபடுத்தும் பல திட்டங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றுவோம். கட்சி நிர்வாகிகள், மக்களுடன் ஒன்றிணைந்து மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றி மாவட்டத்தை முன்னேற்றுவோம்" என்று கூறினார்.

    English Summary

    TVK beat DMK ADMK and form the government. Minister TK Prabhu said Kutty story about TVK success with China Bamboo seed.