இன்ஸ்டா ரீல்ஸ்... சில நிமிடப் புகழ்.. யார் இந்த சிவகங்கை சுள்ளான் மதன்.. நடந்தது என்ன?

  • சிவகங்கை: லைக் வேண்டும்... ஃபாலோயர்கள் வேண்டும்... ஊரே தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்கிற ஆசையில் சில இளைஞர்கள் ரவுடியிசம் என்ற தவறான பாதையை தேர்வு செய்கிறார்கள். ஆயுதங்களை வைத்து மிரட்டி வீடியா வெளியிடுவது, பஞ்ச் வசனங்களுடன் பாட்டு போடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

    Advertisement

    சமூக வலைதளங்களில் இவர்களுக்கு கிடைக்கும் தற்காலிகப் புகழை பார்த்து சின்ன சின்ன சிறுவர்கள் கூட அவர்களை போல் மாறுகிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த சுள்ளான் மதன் கொலை ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு ஆகும்.

    Advertisement

    சிறுவயதில் கண்டிப்புடன் வளர்க்கப்படாத செல்லக்குழந்தை, அது கோபத்தில் செய்யும் செயல்களை எல்லாம் கண்டிக்காமல், அந்த குழந்தைக்கு சப்போர்ட்டாக பெற்றோர் மாறினால் என்னாகும் என்பதே இந்த குற்றத்தின் முதல் பின்னணி ஆகும்.

    கடந்தத 2024-ல் ஒரு மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட தகராறு... அதன்பிறகு நடந்த இரட்டைக் கொலை... அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற சுள்ளான் மதன்... இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் ஒரு மஞ்சுவிரட்டின்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

    சிவங்ககை அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 26 வயதாகும் மதன் ர் மீது கொலை வழக்கு உள்பட 14 வழக்குகள் உள்ளதாகவும், இவர் ரவுடியாக வலம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இவர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான சூர்யா (24), சுபாஷ் (23) ஆகியோரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இவர் ஏற்கனவே 2 முறை சிவகங்கை பகுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    சிவகங்கை அருகே பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! 12 மணி நேரத்தில் 3 பேர் கைது!

    இந்த நிலையில் நேற்று சிவகங்கையை அடுத்த ஒக்கூர் மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதன் தனது காளையை அழைத்து சென்றார். இதையடுத்து நேற்று மதியம் 1 மணி அளவில் மேலமங்கலத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே தனது காளையுடன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் கும்பலாக பயங்கர ஆயுதங்களுடன் சிலர் வந்தனர். உடனே மதன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை ஓட ஓட விரட்டிச்சென்றனர்.

    Advertisement

    அங்குள்ள கரும்பு தோட்டத்தை நோக்கி ஓடிய நிலையில், சுற்றி வளைத்த அந்த கும்பல் வாள், அரிவாளால் சரமாரியாக மதனை வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் தப்பிச்சென்றுவிட்டனர். இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா, சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்லின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் லைலா அழைத்து வரப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நிபுணர்கள் தடயங்களை பதிவுசெய்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    English Summary

    It is reported that 26-year-old Madan, from Pudupatti village near Sivaganga, has 14 cases pending against him—including a murder charge—and was known to operate as a rowdy. Let us take a closer look at his background.