தமிழகத்தில் அடுத்தடுத்து தொடரும் கொடூரம்.. சிவகங்கையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொ*! என்ன நடந்தது?

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 56 வயது பெண் பட்டப்பகலில் வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட மல்லிகா என்ற பெண்ணின் 7 சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் தோடு மாயமாகியுள்ளதால், நகைக்காக இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Advertisement

    தமிழகத்தில் தினந்தோறும் கொலை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். நேற்று தூத்துக்குடியில் நகைக்காக பெண் ஒருவர் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிவகங்கையில் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    Advertisement

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன் மனைவி மல்லிகா (வயது 56). இவர் இன்று வீட்டில் இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் மல்லிகா வீட்டில் இருந்த 7 சவரன் தங்கச்சங்கிலி, ஒரு சவரன் தோடு மாயமாகி இருந்தது. இதனால் நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.

    Advertisement

    சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    In Manamadurai, Sivaganga district, a 56-year-old woman was murdered inside her home in broad daylight, causing a stir. As a seven-sovereign gold chain and a one-sovereign gold earring belonging to the victim, Mallika, are missing, the police are investigating the possibility that the murder was committed for the sake of the jewelry.