Dhanush: அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைகிறாரா? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொல்வதை பாருங்க!

  • சிவகாசி: அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைந்தால் இரு கரம் கூப்பி வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனுஷ் என்றில்லை கட்சிக்கு யார் வந்தாலும் அவர்களை இணைத்துக் கொள்ளும் பக்குவத்தை கொண்டவர்தான் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சிவகாசி மாநகராட்சிக்குள்பட்ட திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் 55 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது.

    Advertisement

    இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பதாவது: சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை விரும்பும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதை எடப்பாடி பழனிசாமியிடமே தெரிவிக்கலாம்.

    எடப்பாடியே எதிர்பாராத டிவிஸ்ட்.. எஸ்பி வேலுமணி யூடர்ன்.. அதிமுகவில் அரங்கேற போகும் மாற்றம்

    அரவணைப்பார் இபிஎஸ்

    கட்சிக்கு யார் வந்தாலும் அவர்களை அரவணைத்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. இவர்தான் வரவேண்டும். அவர்தான் வரவேண்டும் என யாரையும் பிரித்து பார்ப்பது கிடையாது.

    வளர்ச்சி

    இவர் இயக்கத்திற்கு வந்தால் இயக்கத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என கருதினால் அவர்களை இணைத்துக் கொள்ளும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். நல்ல கருத்துகள் எதுவாக இருந்தாலும் அவற்றை எடப்பாடி நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.

    Advertisement

    தனுஷ்

    இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் நடிகர் தனுஷ். முன்னணி கதாநாயகனாக உள்ள தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இரு கரம் கூப்பி வரவேற்போம்.

    அரசியலில் நடிக்கக் கூடாது

    நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கக் கூடாது, இன்றுள்ளவர்கள் படத்திலும் நடிக்கிறார்கள், அரசியலிலும் நடிக்கிறார்கள். நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைய விரும்புவதாக கூறப்படும் தகவல் உண்மையா இல்லை வதந்தியா என்பதை காலம்தான் பதில் சொல்லும். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனுஷ் தனித்து கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இது தொடர்பாக கொடியும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இடைத்தேர்தல்

    அதுபோல் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியால் அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பொதுக் குழுவை கூட்டி விரைவில் அதிமுக தோல்விக்கு காரணத்தை விவாதிக்க வேண்டும் என சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்கு டைம் பாம் ரெடி? 28 எம்எல்ஏக்களுடன் தவெகவுக்கு தாவ முயலும் SPV + CVS அன்ட் கோ?

    அதிமுக தோல்வி

    இதுகுறித்து தூத்துக்குடியில் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பதாவது: இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதால் அதிமுக விழுந்துவிட்டதாக கணக்கு போடுவது தவறு! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சி பெற்றது. இது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு வாக்காளர்கள் அளித்த அங்கீகாரம்.

    Advertisement

    எடப்பாடிதான் தலைவர்

    அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக் கொண்டனர். வேறொரு கோஷ்டிக்கு அதிமுகவில் இடமில்லை. கடம்பூர் ராஜூ அதிமுகவில் இருந்தவரை அவரை அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் அவர் தவெகவுக்கு சென்றதும் அவரை யாருக்கும் தெரியவில்லை.

    ஆற்றுக்கு இரு கரை

    அதிமுகவும் திமுகவும் திராவிட இயக்கத்தின் வழிதோன்றதல்கள். ஆற்றுக்கு இரு கரை உள்ளது போல அதிமுக ஒரு கரை என்றால் திமுக மற்றொரு கரை. இடையே யாரும் ஊடுகால் சாட்ட முடியாது. அதிமுகவில் வெளியே இருந்து கொண்டு பொதுக் குழுவை கூட்டுமாறு யாரும் கட்டளையிட முடியாது.

    Advertisement
    நான் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை! ஆனால்! ஐடியா கொடுத்த சி.வி.சண்முகம்! விஜய்க்கும் பாராட்டு!

    கானல் நீர்

    கட்டளையிட்டு கட்சியை கைப்பற்ற நினைத்தால் அது கானல் நீராகிவிடும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கு ஏற்பட்ட நிலை அதிமுகவுக்கு வராது. இந்த கட்சியை யாராலும் கலைக்க முடியாது.

    கொத்து பரோட்டா

    கொளத்தூரில் 10 நிமிடம் பேசியதால் கொத்து புரோட்டா போட்டுவிட்டோம் என்று ஸ்டாலினை தோற்கடித்ததை பெருமை பேசியவா்கள் இடைத்தோ்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 மணி நேரத்துக்கு மேல் சுற்றுப்பயணம் செய்து தேநீா் குடித்தும், முருங்கைக்காய் பறித்தும்தான் இந்த வெற்றியைப் பெற்றனா். ரசிகர்களை வைத்து செயல்படும் இயக்கம் தவெக. இவ்வாறு அவர் தெரிவித்தார்.