விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் நடந்த விபத்தில் முதலில் 2 பேர் பலியான நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலை சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் தோட்டப்பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது. இன்று காலையிலும் வழக்கம் போல் இங்கு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்துள்ளது. இந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாரத வகையில் வெடி விபத்து ஏற்பட்டது.
திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் உள்ளே சிக்கியிருந்தவர்கள் மரண ஓலம் எழுப்பினர். இரு முறை பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அக்கம்பக்கத்தினர் பலரும் அப்பகுதியில் இருந்து ஓடி சென்றனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வந்ததால் அப்பகுதியில் நிற்க முடியாமல் பலரு 500 மீட்டர் தூரம் விலகி சென்றனர். மேலும் உடனடியாக பட்டாசு விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் தீய அணைக்க முயன்றன. ஆனால் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வந்ததால் அவர்களால் உள்ளே சென்று அதில் வேறு யாரும் சிக்கியிருக்கிறார்களா என பார்க்க முடியவில்லை. எனினும் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் படிப்படியாக தீயை அணைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இப்பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக பட்டாசு விபத்து ஏற்பட்டு அந்த இடத்தை சுற்றி உள்ளவர்கள் பதற்றத்துடன் ஓடி வரும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. குறிப்பாக பட்டாசு விபத்தில் சிக்கிய ஒருவரின் குடும்பத்தினர் கதறி அழுதபடியே ஓடி வரும் காட்சிகளும் அடங்கி இருந்தது. தீயணைப்புத் துறையினர், தண்ணீரை கொண்டு பீய்ச்சியடித்து தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் மேலும் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பட்டாசு ஆலையில் விபத்து
கதறி அழுத குடும்பத்தினர்