ரோஹித்துக்கு கொடுத்த அதே 3 சீசன் ரூல்.. ஹர்திக்கை நீக்குகிறதா மும்பை? வெடித்தது கேப்டன்சி சர்ச்சை!

  • மும்பை: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி குறித்து சமூக வலைதளங்களிலும், கிரிக்கெட் வட்டாரங்களிலும் மீண்டும் ஒரு மிகப்பெரிய விவாதம் வெடித்துள்ளது.

    Advertisement

    "வெற்றி மட்டுமே இலக்கு" என்ற கொள்கையைக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றை உற்று நோக்கினால், வெற்றியை மட்டுமே பிரதானமாக வைத்து நிர்வாகம் முடிவுகளை எடுக்கும் என்பதை அறியலாம்.

    Advertisement

    மும்பை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, கடைசியாக 2020-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றார். அதன்பின்னர் 2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 தொடர்ச்சியான சீசன்களில் அவரால் மும்பை அணிக்குக் கோப்பையைப் பெற்றுத்தர முடியவில்லை. இதன் காரணமாகவே, 2024 சீசனுக்கு முன்பாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    ரோஹித்துக்குப் பிறகு பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் மும்பை அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார் ஹர்திக் பாண்டியா. தற்போது 2024, 2025 மற்றும் நடப்பு 2026 சீசன் என ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 3 சீசன்களாக ஒரு கோப்பையைக் கூட வெல்லாமல் ஏமாற்றம் அளித்துள்ளது.

    Advertisement

    5 முறை கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவுக்கே 3 சீசன்களில் கோப்பை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக மும்பை நிர்வாகம் கல்தா கொடுத்தது. அப்படி இருக்கும் போது, கடந்த 3 சீசன்களாக மும்பை அணியை பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட சரியாகக் கூட்டிச் செல்ல முடியாமல் திணறும் ஹர்திக் பாண்டியாவை ஏன் இன்னும் கேப்டன் பதவியில் நீட்டிக்க வேண்டும் என மும்பை ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி அணுகுமுறை மற்றும் மைதானத்தில் மூத்த வீரர்களைக் கையாளும் விதம் குறித்து ஏற்கனவே பல விமர்சனங்கள் உள்ளன. மேலும், நடப்பு 2026 சீசனிலும் மும்பை அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, பும்ரா அல்லது திலக் வர்மா போன்றவர்களிடம் கேப்டன்சியை ஒப்படைக்க ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    3-Season Rule for Hardik Pandya? Rohit Was Sacked After 3 Trophy-Less Years; Will Mumbai Indians Axe Hardik Now?