10 இன்னிங்ஸ்க்கு பின்.. இதுதான்டா ஸ்ரேயாஸ் ஐயர்.. 42 பந்துகளில் சதம் அடித்து கம்பேக் கொடுத்த கேப்டன்

  • லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். கடந்த 10 இன்னிங்ஸாக ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக முன் நின்று கலக்கி இருக்கிறார். 28 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்த 14 பந்துகளில் சதத்தை எட்டி இருக்கிறார்.

    Advertisement

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கேப்டன் ஷாய் ஹோப் 52 ரன்களையும், ரூதர்ஃபோர்ட் 56 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நமன் திர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    Advertisement

    இதன்பின் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் அபிஷேக் சர்மா 21 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 35 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷன் கூட்டணி இணைந்தது.

    அனைவரும் இஷான் கிஷன் அட்டாக் செய்வார், ஸ்ரேயாஸ் ஐயர் அமைதி காப்பார் என்று எதிர்பார்த்த போது, அப்படியே ரிவர்ஸ் ஆகியது. ஷமார் ஜோசப் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன் மூலமாக 28 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், பின்னர் கியரை மாற்றினார்.

    Advertisement

    இவ்வளவு நேரமாக வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே அட்டாக் செய்த ஸ்ரேயாஸ் ஐயர், இதன்பின் ஸ்பின்னர்களையும் ஒரு கை பார்த்தார். அரைசதம் அடித்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் முழுக்க முழுக்க சிக்சரிலேயே டீல் செய்தார். அதிலும் மேத்யூ ஃபேர்ட் வீசிய 14வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசினார். இதனால் சதம் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    அதற்கேற்ப 42 பந்துகளில் சிக்சர் அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணியின் டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். கடந்த 10 இன்னிங்ஸ்களாக ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். ஆனால் இந்த இன்னிங்ஸில் மொத்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

    English Summary

    Shreyas Iyer: After 10 innings, Shreyas Iyer Scored a 42 ball Century against West Indies in the 1st T20 at Lucknow