துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ருதுராஜ்.. 2023ல் ஆதரவாக நிற்காத பிசிசிஐ.. பாவம்யா அஜித் அகர்கர்!

  • மும்பை: 2023ல் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமிக்க தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் அஜித் அகர்கரின் முடிவை ஏற்காத பிசிசிஐ, காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்த பும்ராவை கேப்டனாக நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விலக முடிவு செய்துள்ளார். அந்த இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அஜித் அகர்கர் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகி செல்வதற்கு பிசிசிஐ நிர்வாகிகள் உடனான கருத்து வேறுபாடே காரணம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    தேர்வுக் குழு தலைவருக்கும், பிசிசிஐ இடையிலும் கருத்து வேறுபாடு வருவது இயல்பு தான். ஆனால் அஜித் அகர்கர் எடுத்த மிக முக்கியமான முடிவுகளை பிசிசிஐ ஏற்க மறுத்ததே இந்த பிரச்சனைக்கு காரணம். அதாவது 2023 அயர்லாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரில் தான் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்தார்.

    இந்திய அணியின் கேப்டனாகவும் பும்ராவே செயல்பட்டார். ஆனால் அஜித் அகர்கர் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளார். அப்போது நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டனாக செயல்பட்டிருந்தார். இதனால் இந்த டி20 தொடர் அவருக்கு சிறந்த தயாரிப்பாக இருக்கும் என்பது அகர்கர் எண்ணமாக இருந்தது.

    Advertisement

    ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க கூடாது என்று பிசிசிஐ தலைமை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நட்சத்திர வீரரான பும்ராவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறது. இறுதியாக ருதுராஜ் கெய்க்வாட் அந்த அணியில் கூட சேர்க்கப்படவில்லை. பும்ரா இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தீவிரமாக இருந்துள்ளார்.

    அவர் பிசிசிஐயிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் மொத்தமாகவே இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். இதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பிடிக்க இன்று வரை போராடி கொண்டே இருக்கிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பிசிசிஐ துரோகத்தால் ருதுராஜ் கெய்க்வாய் போராடி வருவதாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

    English Summary

    Ajith Agarkar Pushed for Gaikwad as Ireland T20 Captain in 2023, but BCCI Appointed Returning Bumrah