இன்று இல்லை... 2027-ல் இருக்கலாம்! - தோனியின் ஓய்வு குறித்து அஸ்வின் வெளியிட்ட பரபரப்பு ட்வீட்!

  • சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் தோனி களமிறங்கப் போவதில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் சூசகமாக கூறியுள்ளார். இதனால் தோனியின் கடைசி போட்டியில் 2027ல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய அஸ்வின், அகீல் ஹொசைன் இந்தப் போட்டியில் விளையாட உள்ளதாகவும் கணித்துள்ளார்.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி களம் காண்கிறது. சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த சீசனின் கடைசி போட்டி இது என்பதால், ஜாம்பவான் வீரர் தோனி விளையாடுவாரா, இதுதான் அவரது கடைசிப் போட்டியா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வந்தது.

    Advertisement

    இந்த நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தோனியின் ஓய்வு குறித்த புதிய கணிப்பையும் உருவாக்கியுள்ளது. அதில் அஸ்வின், "இன்று நடக்க வாய்ப்பில்லை! 2027-ல்? ஒருவேளை இருக்கலாம். பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அகீல் ஹொசைன் உள்ளே வர வாய்ப்பு?" என்று பதிவிட்டுள்ளார்.

    அஸ்வின் தனது பதிவில் தோனியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் மறைமுகமாகச் சொல்வது தோனியைப் பற்றித்தான் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அஸ்வினின் இந்த கணிப்பின்படி இரண்டு முக்கிய விஷயங்கள் தெரிய வருகின்றன. இன்றைய போட்டியில் தோனி இல்லை.

    Advertisement

    காயம் மற்றும் தற்போதைய அணியின் பேலன்ஸ் காரணமாக தோனி இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கப்போவதில்லை என்பதை அஸ்வின் சூசகமாக உடைத்துள்ளார். அதேபோல் இன்றைய போட்டியே தோனியின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்று சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அஸ்வின் ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளார்.

    தோனி இந்த ஆண்டு ஓய்வு பெறப்போவதில்லை என்றும், ஒருவேளை அவர் தனது கடைசிப் போட்டியை 2027 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் அஸ்வின் கணித்துள்ளார். இருப்பினும் தோனி இன்று விளையாடுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அஸ்வினின் இந்த ட்வீட் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், "தலைவன் 2027 வரையில் விளையாடுவார்" என்ற மறைமுகத் தகவல் சிஎஸ்கே ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.

    English Summary

    Ashwin: MS Dhoni To Play in IPL 2027? Ashwin Drops a Massive Bomb Ahead of CSK vs SRH Clash in IPL 2026