இயன் மோர்கன்.. சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் யார்? சூசகமாக சொன்ன காசி விஸ்வநாதன்!

  • சென்னை: சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் ஹேமங் பதானி பயிற்சியாளராக இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் மைக் ஹசி அல்லது இயன் மோர்கன் ஆகியோரில் ஒருவர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படலாம் என்று கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

    Advertisement

    சிஎஸ்கே அணியின் தலைமப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃபிளமிங் பதவி விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தீவிரமாக தேடி வருகிறது. முதலில் ஹேமங் பதானி சிஎஸ்கே பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்தன.

    Advertisement

    அதேபோல் மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், ஆடம் வோஜஸ், ஹேமங் பதானி, மோர்னே மோர்க்கல், அபினவ் முகுந்த் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலமாக வாங்க முயற்சிப்பதாக பேச்சுகள் எழுந்தன.

    ஆனால் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் முற்றிலும் அதனை மறுத்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் டிரேட் தொடர்பாக சிஎஸ்கே அணி பெரியளவில் விவாதிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா தொடர்பாக இன்னும் சிந்திக்கவில்லை என்றே சொல்லலாம். முதற்கட்டமாக சிஎஸ்கே பயிற்சியாளரை நியமனம் செய்ய வேண்டும். எங்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    Advertisement

    விரைவில் பயிற்சியாளரை இறுதி செய்வோம் என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே பயிற்சியாளராக வெளிநாட்டைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறி இருக்கிறார். இதனால் ஹேமங் பதானி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பில்லை என்று புரிய வருகிறது.

    தற்போதைய சூழலில் மைக் ஹசி ஹண்ட்ரட் லீக் தொடரில் அபாரமாக செயல்பட்டு பயிற்சியாளராக நிரூபித்திருக்கிறார். அவர் ஏற்கனவே சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் தான். அதேபோல் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் சிஎஸ்கே பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    CSK: CSK CEO Kasi Viswanathan Hints at Foreign Head Coach, So Mike Hussey and Eoin Morgan Front-Runners