11 இன்னிங்ஸில் 151 ரன்கள்.. ருதுராஜ் தவறால் தப்பித்த பிரெவிஸ்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணமே இவர்தான்!

  • மும்பை: சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதற்கு டிவால்ட் பிரெவிஸின் மோசமான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 11 இன்னிங்ஸில் ஆடியுள்ள டிவால்ட் பிரெவிஸ் வெறும் 151 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இந்த சீசனில் பிரெவிஸ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    Advertisement

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்ம் ஒருபுறம் விவாதப் பொருளாக இருக்க, ரசிகர்கள் இன்னொரு விவகாரத்தையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

    Advertisement

    சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் மிரட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க இளம் புயல் டெவால்ட் பிரெவிஸ், இந்த சீசனில் மிக மோசமாகச் சொதப்பி இருக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் போன்றே பேட்டிங் ஸ்டைல் கொண்டிருப்பதால் 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் பிரெவிஸ், இந்த ஆண்டு சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமாக மாறிவிட்டார்.

    2025 ஐபிஎல் சீசனில் மாற்று வீரராக சென்னை அணியில் இணைந்து விளையாடிய 6 போட்டிகளிலேயே 225 ரன்களை விளாசி இருந்தார். இதனால் இந்த சீசனில் பட்டையை கிளப்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இவர் காயத்தில் இருந்த போது கூட "கண்ட வரச்சொல்லுங்க கர்ணனை" என்று மீம்ஸை எல்லாம் வெளியிட்டனர்.

    Advertisement

    ஆனால் இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய டிவால்ட் பிரெவிஸ், வெறும் 151 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இந்த சீசனில் ஒரு அரைசதம் கூட அவரால் அடிக்க முடியவில்லை. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் பிரெவிஸ் ரன் குவிக்கத் திணறிது கண்கூடாக தெரிந்தது. லெக் ஸ்பின்னர்கள் மற்றும் இடதுகை ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை வாரி வழங்கினார்.

    இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான பேட்டிங் டிவால்ட் பிரெவிஸின் தொடர் சொதப்பல்களையும் மறைத்துவிட்டது. டிவால்ட் பிரெவிஸ்க்கு போதுமான அனுபவம் இல்லையென்று சொன்னாலும், டி20 உலகக்கோப்பை மற்றும் எஸ்ஏ20 லீக் தொடர்களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார். இதனால் பிரெவிஸ் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களிடையே இப்போது விமர்சனத்தை பெற்று வருகிறது.

    English Summary

    CSK: Dewald Brevis Fails to Fire as CSK Middle-Order Struggles Post-Elimination and Scored just 151 runs in 11 innings