சிஎஸ்கே பிளே ஆஃப் முன்னேற இனி இந்த அதிசயம், அற்புதம் நடக்கணும்! இதை விட்டா வேற வழியே இல்லை

  • சென்னை: ஐபிஎல் 2026 கோப்பையை சென்னை அணி வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழல் உருவாகியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கும் சிஎஸ்கே, மற்ற அணிகளின் போட்டி முடிவுகளையும் நம்பி காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    Advertisement

    19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டித் தொடரில் நடப்பு சாம்பியன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டாப் 4-க்குள் தற்போதைய நிலவரப்படி குஜராத் டைடன்ஸ் (16 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (14 புள்ளிகள்), பஞ்சாப் கிங்ஸ் (13 புள்ளிகள்) அணிகள் உள்ளன.

    Advertisement

    பிளே ஆஃப் செல்லுமா

    5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 13-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருக்க ஐதராபாத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும். மாறாக தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். ஆனால் இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற முடியாது. இன்னும் சில போட்டிகளின் முடிவையும் சென்னை அணி எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியிருக்கும்.

    Advertisement

    சென்னை அணிக்கான வாய்ப்புகள்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வெல்ல வேண்டும் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதமுள்ள போட்டிகளில் குறைந்தது ஒன்றில் தோல்வியடைய வேண்டும். (அந்த அணி ஏற்கனவே வெளியேறிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது). இந்த சூழலில், நெட் ரன் ரேட் கணக்கீடு தேவையில்லை.

    ஆனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது இரு போட்டிகளிலும் வென்றாலோ, அல்லது பெங்களூருவை வீழ்த்தினாலோ, நெட் ரன் ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும். சென்னை அணி 14 புள்ளிகளுடன் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு பிற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.

    Advertisement

    * ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.
    * லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸை வெல்ல வேண்டும்.
    * கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸை வெல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியடைய வேண்டும். இப்படி சில அதிசயங்களும் அற்புதங்களும் நடந்தாலே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

    English Summary

    CSK: Chennai Super Kings are still in the race for the IPL 2026 playoffs but must defeat Sunrisers Hyderabad in their upcoming match to stay alive. Even with a win, CSK’s qualification hopes depend on the results of several other teams, including Rajasthan Royals, Punjab Kings and Kolkata Knight Riders. Net run rate could also play a crucial role if Hyderabad continue winning matches.