மைக் ஹசியை வீட்டுக்கு அனுப்பிய சிஎஸ்கே.. முடிவுக்கு வந்த ஒப்பந்தம்.. ஜாகீன் கான் முடிவு என்ன?

  • சென்னை: சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக் ஹசி உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் வேறு சில பெயர்களை பரிசீலனை செய்து வருகிறார். இதனால் மைக் ஹசி உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    ஐபிஎல் தொடரின் 20வது சீசனை பிசிசிஐ பிரம்மாண்டமாக நடத்த முடிவு எடுத்துள்ளது. இதற்காக அக்டோபர் 15ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களையும் ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால் வரும் நாட்களில் ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதற்கேற்ப முதலீடு செய்ய தயாராகுமாறு கேட்டு கொள்ளவே இந்த ஆலோசனை கூட்டம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நவம்பர் 15ஆம் தேதி ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    அதனை முடிவு செய்வதற்குள் ஒவ்வொரு அணியும் பயிற்சியாளர் நியமனத்தை முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே சிஎஸ்கே அணி ஜாகீர் கானையும், டெல்லி அணி சவுரவ் கங்குலியையும் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் விலகி இருக்கின்றனர்.

    Advertisement

    அவர்களுக்கான மாற்று பயிற்சியாளர்களை பாண்டிங் தேடி வருகிறார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பவுலிங் பயிற்சியாளராக மோகித் சர்மா நியமனம் தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் மைக் ஹசி பேட்டிங் பயிற்சியாளராக தொடர்வார் என்று எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் மைக் ஹசி மற்றும் சிஎஸ்கே இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாகீர் கான் பேட்டிங் பயிற்சியாளராக வேறு சில பெயர்களை பரிசீலனை செய்து வருகிறார். அதேபோல் ஒராண்டு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளதால், இறுதி முடிவை எடுக்க இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என்றும் கருதப்படுகிறது.

    English Summary

    CSK Parts Ways With Batting Coach Mike Hussey as Head Coach Zaheer Khan Considers New Names