இந்திய அணிக்கு அதிர்ச்சி! உடற்தகுதி தேர்வின் போது புது காயம்.. AFG தொடரிலிருந்து பாண்டியா விலகல்

  • மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணிக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியிருந்த நிலையில், தற்போது ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

    Advertisement

    உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சில மணி நேரங்களிலேயே அவருக்கு மீண்டும் புதிய காயம் ஏற்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணியை வழிநடத்திய போது, ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பல போட்டிகளில் விளையாடவில்லை.

    Advertisement

    இந்த காயத்தில் இருந்து குணமடைந்த பாண்டியா, ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்பதற்கான உடற்தகுதி சான்றிதழைப் பெறுவதற்காகப் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் தேசிய சிறப்பு மையத்திற்கு வந்திருந்தார். அங்கு நடைபெற்ற தீவிரப் பயிற்சிகள் மற்றும் உடற்தகுதி சோதனையின் போது, அவர் தனது முழு கோட்டாவான 10 ஓவர்களையும் வீசி சோதிக்கப்பட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொடைப் பகுதியில் பலத்த தசைநார் காயம் ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா ஆரம்பத்தில் அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்று கிரீன் சிக்னல் பெற்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த தொடைக்காயம் அவரை முடக்கியுள்ளது. இதிலிருந்து அவர் மீண்டு வரக் குறைந்தது 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என்பதால், ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் அவர் விளையாட வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    Advertisement

    தொடைக்காயம் காரணமாகத் தொடரிலிருந்து முழுமையாக விலகி இருக்கிறார். பெங்களூரிலேயே தங்கி மறுவாழ்வுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார். ஜூலையில் வரவிருக்கும் இங்கிலாந்து தொடரிலும் இவர் ஆடுவது சந்தேகமே. ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது ஏற்பட்ட ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஏற்கனவே ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகிவிட்டார். இவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    உடற்தகுதி தேர்வில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் விளையாடுவதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என்று தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் திட்டமிட்டிருந்த வேளையில், இந்த புதிய காயம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேலன்ஸை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை தர்மசாலாவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Hardik Pandya: After Virat Kohli, Hardik Pandya Also Ruled Out of Afghanistan Series Due to Quadriceps Strain