மும்பைக்கு சிவம் துபே, பிரெவிஸ்.. சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்டியா.. டிரேடில் யாருக்கு அதிக லாபம்?

  • மும்பை: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான டிரேட் ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் சிவம் துபே மற்றும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோருக்கு பதிலாக மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கொடுக்க முன் வந்துள்ளது. இதில் யாருக்கு அதிக லாபம் என்பது குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் எதிரிகள் போல் இருப்பார்கள். ஆனால் இந்த இரு அணிகளுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக சோதனைக்கு மேல் சோதனை தொடர்ந்து வருகிறது. மும்பை அணிக்குள் ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்த நாள் முதலே அந்த அணி மிகப்பெரிய பின்னடவை சந்தித்து வருகிறது. அணிக்குள்ளும் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.

    Advertisement

    அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் 3 சீசன்களாக பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து வெளியேற்றிவிட்டு, மும்பை அணிக்கு புதிய கேப்டனை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மும்பை அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் திலக் வர்மா முன்னணியில் இருக்கிறார்.

    ஆனால் ஹர்திக் பாண்டியாவை ரிலீஸ் செய்வதை விடவும், அவரை டிரேட்டில் விட்டால் அது மும்பை அணிக்கு மிகப்பெரிய பலனாக அமையும். இதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவுக்கு நிகரான வீரரை மும்பை அணியால் வாங்க முடியும். அதன்படி மும்பை அணி டெல்லி, கேகேஆர், ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    Advertisement

    இதில் ராஜஸ்தான் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை விட்டுக் கொடுக்க முன் வந்தது. கேகேஆர் அணி ரிங்கு சிங்கை கொடுக்க தயாராக இருந்தது. டெல்லி அணியோ அக்சர் படேல் மற்றும் பிரித்வி ஷாவை கொடுக்க முன் வந்தது. ஆனால் சிஎஸ்கே அணி சிவம் துபே மற்றும் டிவால்ட் பிரெவிஸ், கலீல் அஹ்மத், அன்சுல் கம்போஜ் ஆகியோரில் ஒருவரை கொடுக்க முன் வந்தது.

    ஹர்திக் பாண்டியாவும் சிஎஸ்கே அணி பக்கம் செல்ல விரும்பி இருக்கிறார். இறுதியாக மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையில் டிரேட் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த டிரேட் மூலமாக சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு 32 வயதாகிறது. அவரால் இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் ஐபிஎல் தொடர்களில் விளையாட முடியும்.

    Advertisement

    அதேபோல் ஹர்திக் பாண்டியா 3டி வீரர் என்பதால், சிஎஸ்கே அணிக்கு ஃபினிஷர் மற்றும் பவுலிங் பிரச்சனை முடிவுக்கு வரும். ஆனால் மும்பை அணிக்கு சிவம் துபே சென்றால், பேட்டிங்கில் மட்டுமே பங்களிப்பு செய்ய முடியும். ஏற்கனவே வில் ஜாக்ஸ் இருப்பதால், டிவால்ட் பிரெவிஸை வைத்து மும்பை அணி என்ன செய்யும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    English Summary

    Hardik Pandya: Who Benefits More between CSK and MI as Hardik Pandya, Shivam Dube & Brevis Swap Takes Center Stage?