இப்படி ஒரு ஸ்பின்னரை பார்த்து ரொம்ப நாளாச்சு.. அறிமுக வீரர் மானவ் சுதாரை பாராட்டிய பியூஷ் சாவ்லா

  • சண்டிகர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அறிமுக ஸ்பின்னரான மானவ் சுதார் முதல் இன்னிங்ஸிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் மானவ் சுதாரை இந்திய ஜாம்பவான்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    Advertisement

    ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஒரே ஒரு போட்டி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார் 23 வயதான இளம் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார். தனது அறிமுகப் போட்டியின் இரண்டாவது நாளிலேயே அசுரத்தனமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஃப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்துள்ளார்.

    Advertisement

    அறிமுகப் போட்டியிலேயே விக்கெட்டுகளை வேட்டையாடி இந்திய அணியின் முழு கட்டுப்பாட்டிற்குள் ஆட்டத்தைக் கொண்டு வந்த மானவ் சுதாரின் 'கிளாசிக்' பந்துவீச்சு பாணியை, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா மனதாரப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக பியூஷ் சாவ்லா பேசுகையில், தற்கால கிரிக்கெட்டில் பல சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தின் வேகத்தை நம்பியே செயல்படுகின்றனர்.

    ஆனால் மானவ் சுதார் பாரம்பரியமான முறையில் பந்தை சுழல வைப்பது தன்னை ஈர்த்துள்ளது. ஒரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர் பந்தை ரிலீஸ் செய்யும் போது தனது சுட்டுவிரலை (Index Finger) இவ்வளவு நேர்த்தியாகவும், திறமையாகவும் பயன்படுத்துவதை நான் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அவரது பந்துவீச்சில் இருக்கும் அந்த கிளாசிக் சுழற்சி பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கிறது.

    Advertisement

    நவீன கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு பயந்து வேகத்தைக் கூட்டாமல், பந்தின் லைன் மற்றும் லெந்த்தை சரியாக கணித்து, காற்றில் மிதக்கவிட்டு அவர் விக்கெட் எடுக்கும் விதம் அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்த பிறகு களம் இறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, மானவ் சுதார் தனது பந்துவீச்சில் அசத்தினார்.

    இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் வேளையில், அதில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவிற்குப் பலம் சேர்த்துள்ளார் சுதார். அஷ்வின், ஜடேஜா போன்ற ஜாம்பவான்கள் இல்லாத இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ஸ்பின் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தன்னிடம் போதிய திறமை உள்ளது என்பதை மானவ் சுதார் தனது முதல் போட்டியிலேயே நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    English Summary

    "Haven't Seen a Spinner Use Their Index Finger This Well in a Long Time": Piyush Chawla Hails Indian Debutant Manav Suthar