IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை!

  • அகமதாபாத்: ஐபிஎல் (IPL 2026) சீசன் நிறைவடைந்துள்ளது. இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது ஆர்சிபி (RCB) அணி. ஐபிஎல் கோப்பை வென்ற ஆர்.சி.பி அணிக்கும், மற்ற சிறந்த வீரர்களுக்கும் பரிசு மழை கொட்டியுள்ளது.

    Advertisement

    ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த விருதுகளையும் வாரிக்குவித்த வைபவ் சூர்யவன்ஷி ரூபாய் 60 லட்சம் பரிசுத்தொகையை அள்ளியுள்ளார். புத்தம் புதிய டாடா சியாரா காரையும் தனதாக்கியுள்ளார்.

    Advertisement

    பரிசுத்தொகை

    அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு ரூபாய் 20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூபாய் 13 கோடியும் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

    குவாலிஃபையர்-2 ல் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், எலிமினேட்டர் ஆட்டத்தில் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    வைபவ் சூர்யவன்ஷி காட்டில் மழை

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு கேப், எம்பிவி (MVP) உட்பட பல முக்கிய விருதுகளையும், பெரும் தொகையையும் வென்றுள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும், அந்த அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த சீசனையும் தனது அசுரத்தனமான பேட்டிங்கால் ஆட்கொண்டார்.

    வைபவ் சூர்யவன்ஷி, 16 இன்னிங்ஸ்களில் 48.50 சராசரியுடன் 776 ரன்கள் குவித்து, குஜராத் அணியின் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில் (732) மற்றும் சாய் சுதர்சனை (722) பின்னுக்குத் தள்ளி இந்த சீசனின் 'ஆரஞ்சு கேப்' விருதை தட்டிச் சென்றார். ஆரஞ்சு கேப் மட்டுமல்லாமல் ஐபிஎல் 2026-ன் மிக உயரிய தனிநபர் விருதான 'மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர்' மற்றும் 'எமர்ஜிங் பிளேயர்' ஆகிய விருதுகளையும் வென்று மாஸ் காட்டியுள்ளார்.

    Advertisement

    ஆர்சிபி சாம்பியன்

    நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசன் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் குஜராத் அணி155 ரன்கள் எடுத்தது.

    அதைத்தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணி, வெங்கடேஷ் ஐயரின் அதிரடித் துவக்கம் மற்றும் விராட் கோலியின் மிரட்டலான அரைசதத்தால் 12 பந்துகள் மீதமிருக்க எளிதாக வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

    சாம்பியன் ஆன ஆர்.சி.பி அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசு வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையைத் தவறவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ₹12.5 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.

    Advertisement

    ஆரஞ்சு, பர்ப்பிள் கேப்

    மோஸ்ட் வேல்யுபிள் பிளேயர் (MVP): தொடர் முழுவதும் அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, 436.5 புள்ளிகளுடன் இந்த சீசனின் மிகச்சிறந்த வீரருக்கான 'மோஸ்ட் வேல்யுபில் பிளேயர்' (MVP) விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்காக அவருக்கு ₹10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

    ஆரஞ்சு கேப்: அதிக ரன்கள் குவித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு (ராஜஸ்தான் ராயல்ஸ்) ₹10 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.

    பர்ப்பிள் கேப்: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் காகிசோ ரபாடா ₹10 லட்சம் பரிசைத் தட்டிச் சென்றார்.

    Advertisement

    மற்ற விருதுகள்

    இந்த சீசனில் யாரும் செய்யாத சாதனையாக 237.30 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 'எலக்ட்ரிக் சூப்பர் ஸ்டிரைக்கர்' விருதையும், அதற்காகப் புதிய டாடா சியரா (Tata Sierra) காரையும் பரிசாகப் பெற்றுள்ளார். ஒரே சீசனில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்துள்ள வைபவ்வுக்கு, சூப்பர் சிக்ஸஸ் விருதும், 10 லட்சமும் வழங்கப்பட்டது.

    இறுதிப்போட்டியில் அசத்திய வென்ற பரிசுகள்

    குஜராத் அணியின் முகமது சிராஜ் (அதிக டாட் பால்கள்), சாய் சுதர்சன் (ஃபேண்டஸி கிங் மற்றும் அதிக ஃபோர்கள்) ஆகியோருக்குத் தலா ₹10 லட்சம் கிடைத்தது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மனிஷ் பாண்டேவுக்குச் சிறந்த கேட்ச் விருதும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஃபேர்பிளே விருதும் தலா ₹10 லட்சத்துடன் வழங்கப்பட்டது.

    சிறந்த மைதானத்திற்கான பரிசாகக் கொல்கத்தாவின் சிஏபி (CAB) மைதானத்திற்கு ₹50 லட்சமும், எச்பிசிஏ (HPCA) மைதானத்திற்கு ₹25 லட்சமும் அறிவிக்கப்பட்டது.

    இறுதிப்போட்டி விருதுகள்: ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலிக்கு ₹5 லட்சமும் (அதிக ஃபோர், சிக்ஸ் விருதுகளுக்குத் தலா ₹1 லட்சம்), வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமாருக்குத் தலா ₹1 லட்சமும் பரிசாகக் கிடைத்தது.

    English Summary

    The IPL 2026 season has concluded. RCB has successfully defended its championship title by winning the final match. A shower of prizes has rained down upon the victorious RCB team, as well as other standout players. Vaibhav Suryavanshi, who swept up the majority of the awards in the IPL 2026 tournament, has pocketed a prize sum of ₹60 lakhs. He has also claimed ownership of a brand-new Tata Sierra car.