அவுட்னு கத்திய ஷர்துல்.. அலறிய நோ-பால் சைரன்.. காண்டுல பழிவாங்கிய ஜடேஜா.. மைதானத்தில் சிரிப்பலை!

  • மும்பை: மும்பை அணியின் ஷர்துல் தாகூர் மற்றும் ராஜஸ்தான் அணியின் ரவீந்திர ஜடேஜா இடையில் நடந்த ஜாலியான மோதல் சம்பவம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷர்தில் தாகூர் வீசிய பந்தில் ஜடேஜா விக்கெட்டான போது, அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது ஷர்துல் தாகூர் ஆக்ரோஷமாக கொண்டாட, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு ஜடேஜாவும் தாகூரை வம்புக்கு இழுத்தார்.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வெறும் 175 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அபாரமாக செயல்பட்டார்.

    Advertisement

    இந்த போட்டிக்கு நடுவே ஷர்துல் தாகூர் மற்றும் ஜடேஜா இடையில் நடந்த ஜாலியான மோதல் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது. மைதானத்தில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அப்போது ஜடேஜாவை பார்த்து ஷர்துல் தாகூர், சோலியை முடிச்சிட்டேன் பார்த்தியா என்பது போல் வெற்றிக்குறி காட்டி கொண்டாடினார். ஆனால் அந்த பந்து நடுவரால் திடீரென நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த 2 பந்துகளை ஜடேஜா பவுண்டரிக்கு விளாசினார். அப்போது ஷர்துல் தாகூரை பார்த்து, "தம்பி.. இது எப்படி இருக்கு" என்பது போல் வெற்றிக்குறி காட்டி பதிலடி கொடுத்தார்.

    Advertisement

    ஷர்துல் தாகூர் அதனை கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற போது, ஜடேஜா வேண்டுமென்றே அவர் முன்னால் சிரித்து கொண்டே கொண்டாடினார். இதனால் ஷர்துல் தாகூர், சும்மா இருங்கப்பா என்பது போல் ஜாலியாக விலகி சென்றார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடி இருக்கின்றனர்.

    அந்த நட்பின் அடிப்படையில் மைதானத்தில் வேடிக்கையான மோதலில் ஈடுபட்டனர். வழக்கமாக ஜடேஜா எப்போதும் இப்படியான ஜாலியான உரசல்களை மைதானத்தில் அரங்கேற்றுவார். சில ஆண்டுகளுக்கு முன் டேவிட் வார்னர் - ஜடேஜா இடையில் நடந்த ஜாலியான சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது

    English Summary

    Jadeja: Ravindra Jadeja Mocks Shardul Thakur in Hilarious Out-of-Seat Banter After Wankhede No-Ball Drama