21 விக்கெட்டுகள்.. ராஜஸ்தான் அணிக்காக ஒற்றை ஆளாய் நிற்கும் ஆர்ச்சர்.. மெகா சாதனை படைத்த வேகப்புயல்!

  • மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஆர்ச்சர் 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசியதோடு, பவுலிங்கில் 4 ஓவர்களை வீசிய 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக ஆர்ச்சர் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஆர்ச்சர் அமைந்தார். பேட்டிங்கில் விக்கெட்டுகள் சரிந்த போது திடீரென 15 பந்துகளில் 32 ரன்களை விளாசி தள்ளினார்.

    Advertisement

    அதேபோல் பவுலிங்கில் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரோகித் சர்மா, நமன் திர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை ஆர்ச்சர் வீழ்த்தியதால், அந்த அணி எளிதாக வெற்றியை பெற்றது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் ஆபத்பாந்தவனாக ஆர்ச்சர் மாறி இருக்கிறார்.

    14 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ச்சர் 21 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் மூலமாக ராஜஸ்தான் அணிக்காக 2 சீசன்களில் 20 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2020 மற்றும் 2026 ஆகிய சீசன்களில் ஆர்ச்சர் ராஜஸ்தான் அணிக்காக 20 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார்.

    Advertisement

    அதேபோல் சாஹல் 2022 மற்றும் 2023 ஆகிய இரு சீசன்களிலும் 20 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். இருப்பினும் ராஜஸ்தான் அணிக்காக ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமை ஜேம்ஸ் ஃபால்க்னர் வசம் உள்ளது. 2013 சீசனில் 16 போட்டிகளில் ஆடிய ஜேம்ஸ் ஃபால்க்னர் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

    நடப்பு சீசனிலேயே ஆர்ச்சர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சனின் 67 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வரலாற்றிலேயே 'அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்' என்ற அரிய சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார். காயத்திற்கு பின் ஆர்ச்சர் ராஜஸ்தான் அணிக்கு சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Jofra Archer: Jofra Archer Scripts History for Rajasthan Royals! Becomes Only the 2nd Bowler to Hit This Massive Milestone