ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ராகுல்.. விராட் கோலி, சாம்சன், கில்லாம் ஓரம்போங்க!

  • மும்பை: ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோருக்கு பின் மிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கேஎல் ராகுல் வைத்துள்ளார். 174.41 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ள கேஎல் ராகுல், 14 இன்னிங்ஸில் ஒரு சதன், 5 அரைசதம் உட்பட 593 ரன்களை குவித்து மிரட்டி இருக்கிறார்.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கியுள்ள கேஎல் ராகுல், அந்த விமர்சனங்களை அசாத்திய பேட்டிங்கால் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார்.

    Advertisement

    அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியால் இந்த சீசனிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வென்றாலும் கூட டெல்லி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்துள்ளது.

    சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 30 பந்துகளில் 4 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களை விளாசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்கள் உட்பட 593 ரன்களை குவித்துள்ளார். கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் 500 ரன்களை விளாசுவது வழக்கமான விஷயம் என்றாலும், இம்முறை 174.41 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருப்பது வழக்கத்திற்கு மாறானது.

    Advertisement

    டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் ஓவர் ரேட்டட் என்று கூறி கேஎல் ராகுல் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அப்படி சொன்ன கேஎல் ராகுல் இப்போது ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் என்பதை உணர்ந்து பேட்டிங் ஆட தொடங்கி இருக்கிறார். இந்த சீசனில் டி20 கிரிக்கெட்டின் டாப் அதிரடி மன்னர்களான விராட் கோலி, ஹென்ரிச் கிளாசன், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை விட அதிக ஸ்ட்ரைக் ரேட் பெற்றுள்ளார்.

    கேஎல் ராகுலை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டை இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் மட்டுமே வைத்திருக்கின்றனர். அதிக ஸ்ட்ரைக் ரேட் மற்றும் கன்சிஸ்டன்சி அடிப்படையில் கேஎல் ராகுல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சுப்மன் கில், சாய் சுதர்சன் உள்ளிட்டோர் ஸ்ட்ரைக் ரேட் இன்னும் குறைவாக 160க்கு அருகில் தான் இருக்கிறது.

    English Summary

    KL Rahul: Delhi Capitals Opener KL Rahul Silences Strike-Rate Critics, Outshines Elite T20 Batters in Style