ராஞ்சிக்கு பறந்த தோனி.. சிஎஸ்கே வீரர்கள் மீது அதிருப்தி.. கடைசி லீக் போட்டியில் இருந்தும் விலகிய தல!

  • மும்பை: சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி, சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திடீரெனத் திரும்பியுள்ளார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கடைசி ஆட்டத்தில் தோனி பங்கேற்க மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் நாளை அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடாத தோனி, இந்த முக்கியமான கடைசி லீக் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்பதும், அவர் அகமதாபாத் செல்லவில்லை என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

    Advertisement

    கடந்த வாரம் சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஹோம் மேட்ச் முடிந்த பிறகு, தோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மைதானத்தைச் சுற்றி வலம் வந்தார். அந்த சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. ஆனால் வழக்கமாக தோனியிடம் இருக்கும் உற்சாகம் குறைந்தே காணப்பட்டது.

    இதனால் ஒரு பந்தை கூட ரசிகர்களை நோக்கி தோனி அடிக்கவில்லை. ஒரு டீ ஷர்ட்டை கூட ரசிகர்களுக்கு வீசவில்லை. ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி அடைந்த தோல்வியே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. தோனி மகிழ்ச்சியாக இல்லை என்பதை அஸ்வினும் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து பாதியிலேயே விலகி தோனி வீட்டிற்கு சென்றுள்ளார்.

    Advertisement

    இதனால் சிஎஸ்கே அணி தலைவன் இல்லாத படையாக மாறி இருக்கிறது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் ஆட்டம் மீது தோனி அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும் கூட, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை அடிப்படையாக வைத்தே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    தொடர்ந்து 3 சீசன்களாக சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங்கும், சிஎஸ்கே நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கூறி இருந்தார்.

    English Summary

    MS Dhoni: End of an Era or Just a Break? MS Dhoni Heads Home to Ranchi, Missing CSK’s Crucial Final League Game against GT