தல தரிசனம்.. ஒரு வழியாக சேப்பாக்கம் மைதானம் வந்த தோனி.. சென்னையை அதிரவிட்ட சிஎஸ்கே ரசிகர்கள்!

  • சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி இந்த சீசனில் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானம் வந்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி போட்டி என்பதால், டீம் புகைப்படம் எடுக்க வந்தார். அப்போது சிஎஸ்கே ரசிகர்கள் ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானத்தையும் அதிரவிட்டனர்.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி விளையாடும் கடைசி போட்டி இதுவாகும். இதனால் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    Advertisement

    ஆனால் டாஸின் போதே தோனி களமிறங்க மாட்டார் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அறிவித்தார். இந்த சீசனில் தோனி இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை. அதேபோல் போட்டியின் போது தோனி மைதானத்திற்கு வருவதை தவிர்த்தார். அது சிஎஸ்கே அணி மீது ஏராளமான அழுத்தத்தை உருவாக்கும் என்று கருதி, அந்த முடிவினை எடுத்தார்.

    இதனால் போட்டி நடக்கும் போது கூட தோனி ஹோட்டலிலேயே இருந்தார். சிஎஸ்கே அணி மற்ற மாநிலங்களுக்கு சென்று விளையாடும் போது கூட தோனி பயணிக்கவில்லை. இதனால் இந்த சீசனில் தோனியின் புகைப்படங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு வெளி வந்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியிலாவது தோனி தரிசனம் கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.

    Advertisement

    அதற்கேற்ப சிஎஸ்கே அணி முதல் பேட்டிங் ஆடியது. சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை சேர்த்தது. முதல் இன்னிங்ஸ்க்கு பின் சிஎஸ்கே அணி வீரர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அதற்காக ஹோட்டலில் இருந்த தோனி சேப்பாக்கம் மைதானம் வந்தார். தோனி சிஎஸ்கே அணியின் மஞ்சள் ஜெர்சி அணிந்து களமிறங்கிய போது, ஒட்டுமொத்த மைதானமும் அதிரத் தொடங்கியது.

    தோனியை கண்ட ரசிகர்கள் பலரும் ஆரவாரம் மேற்கொண்டனர். ரசிகர்களின் உற்சாகத்தை கண்ட தோனி, அங்கிருந்து சிரித்து கொண்டே வெளியேறினார். இதன்பின் தோனி மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பிவிட்டதாக தெரிய வந்துள்ளது. ஒரு வழியாக சேப்பாக்கம் மைதானத்தில் தல தரிசனம் கிடைத்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    MS Dhoni: MS Dhoni joins the squad for a team photo with this marking CSK final game at Chepauk in IPL 2026