டி20 கிரிக்கெட் என்பது ஒரு வழிப்பாதை.. ஒன்று அடிக்கணும்.. இல்ல அவுட்டாகணும்.. சஞ்சு சாம்சன் ஷேரிங்ஸ்!

  • இந்தூர்: இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் போது தொடர்ச்சியாக 3 மோசமான இன்னிங்ஸை விளையாடினாலும் கவலை கிடையாது என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக சிறந்த தொடக்கத்தை கொடுப்பதே எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பு என்று கூறிய சஞ்சு சாம்சன், நான் ஆட்டமிழக்கும் போது வரும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று மாலை இந்தூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே ராஞ்சி மைதானத்தில் பவுலர்கள் கொடுமையை அனுபவித்த நிலையில், இன்றைய ஆட்டம் இந்தூரில் நடப்பதால் மீண்டும் பவுலர்கள் அச்சத்தில் இருக்கவே வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்திய அணி பவுலர்கள் டிஃபென்ஸிவ் லெந்தில் பவுலிங் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இதனிடையே கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அதிரடி ஃபார்முக்கு திரும்பினார். ஏசியன் கேம்ஸில் தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் சொதப்பிய போது சில விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த இன்னிங்ஸ் அமைந்தது.

    இந்த நிலையில் போட்டிக்கு முன் சஞ்சு சாம்சன் கொடுத்துள்ள நேர்காணலில், சில நேரங்களில் தொடர்ந்து 3 இன்னிங்ஸில் கூட நம்மால் ரன்கள் சேர்க்க முடியாமல் போகும். அதனால் அடுத்த இன்னிங்ஸில் கொஞ்சம் இன்னிங்ஸை நிதானமாக கட்டமைத்துவிட்டு, கடைசி நேரத்தில் அதிரடிக்கு திரும்பலாம் என்று நினைக்க கூடாது. டி20 கிரிக்கெட் என்பது ஒரு வழிப்பாதை தான்.

    Advertisement
    யப்பா கவர்ஸில் அந்த சிக்ஸ்.. கிளாசிக் பேட்ஸ்மேன்டா சஞ்சு சாம்சன்.. தோனி ஊரில் தரமான சம்பவம்!

    எப்போதும் அணியின் வெற்றிக்கும், நலனுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திய அணிக்காக சிறந்த தொடக்கம் கொடுக்க வேண்டியது என்னுடைய பணி.. அதற்காக ஒவ்வொரு போட்டியிலும் முயற்சிக்கிறேன். சில நேரங்களோஇல் ஆட்டமிழந்துவிடுகிறேன். அதற்கு நான்தான் பொறுப்பு. என்னை தான் நான் குற்றம் சொல்ல வேண்டும்.

    நான் ரன்கள் சேர்க்காத போது எப்படி மற்றவர்கள் மீது குறை சொல்ல முடியும். எனக்கு கொடுக்கப்பட்ட வேலை ஒன்று மட்டும்தான். அந்த பணியை ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் தொடக்க காலம் முதலே 3 பந்துகளை டாட் வைத்தால், அடுத்த பந்தில் பவுண்டரி, சிக்சர் அடிக்க முயற்சிப்பார். அதனை மாற்று கொள்ள மாட்டேன் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.

    English Summary

    “My Job Is to Deliver Strong Starts”: Sanju Samson Accepts Criticism Over Risk-Heavy Opener Role