சிவம் துபே இடத்தை பிடிக்க ஆள் ரெடி.. பவுலிங்கில் மிரள வைக்கும் நமன் திர்.. ஆட்டத்தையே மாத்திட்டாரு!

  • இந்தூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான நமன் திர் பவுலிங்கில் 3 ஓவர்களை வீசி முக்கியத்துவம் வாய்ந்த 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் சிவம் துபேவின் இடத்தை பிடிக்க நமன் திர் ரெடியாகி வருவதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 69 ரன்களை விளாசி தள்ளினார்.

    Advertisement

    மிடில் ஆர்டர் வீரர்கள் பொறுப்பின்றி விளையாடியதால், இந்திய அணியின் ஸ்கோர் குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. அதிகம் நம்பி இருந்த ஷாய் ஹோப் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் பார்ட் டைம் ஸ்பின்னரான நமன் திர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.

    நமன் திர் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் சிக்சர் விளாசப்பட, அடுத்த பந்திலேயே ஹெட்மயரை போல்ட் எடுத்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 11வது ஓவரில் அட்டாக்கில் வந்த நமன் திர் பவுலிங்கில் கமில் பூரன் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி தள்ளினார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்திலும் கமில் பூரன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

    Advertisement

    இதன் மூலமாக மொத்தமாக 3 ஓவர்களை வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கில் நமன் திர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் பவுலிங்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செட்டிலாகி இருந்த 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையும் கைப்பற்றி மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.

    இதனால் சிவம் துபேவின் இடத்திற்கு நமன் திர் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் பவுலிங் ஆல்ரவுண்டராக இருப்பதால், பேட்டிங் ஆல்ரவுண்டரான நமன் திர் தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Naman Dhir got 2 wickets against wI and getting ready to fill the place of Shivam Dube in the Indian T20 Team