ஐதராபாத் அணிக்கு கம்பேக் கொடுத்த நடராஜன்.. சொல்லி அடித்த காவ்யா மாறன்.. மிக்சர் சாப்பிடும் சிஎஸ்கே!

  • மும்பை: டெல்லி அணியின் நடராஜன் மீண்டும் ஐதராபாத் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக ஐதராபாத் அணியின் ஜீசன் அன்சாரி டெல்லி அணிக்கு கொடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடராஜனின் ஊதியத்தை ரூ.5 கோடியாக ஐதராபாத் அணி குறைத்து டிரேட் ஒப்பந்தத்தை முடித்துள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

    Advertisement

    ஐபிஎல் தொடருக்கான டிரேட் ஒப்பந்தங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. 2 மாதங்களுக்கு முன் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கும் டிரேட் செய்யப்பட்டனர். இதன்பின் டெல்லி அணியின் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டார்.

    Advertisement

    இதன்பின் டெல்லி அணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்லி அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். ஒரு சீசனில் காயம் காரணமாக சில போட்டிகளில் மட்டுமே ஆடினார்.

    கடந்த சீசனில் நடராஜனால் முழுமையாக விளையாட முடியவில்லை. இந்த நிலையில் நடராஜனை டெல்லி அணி நிர்வாகம் டிரேட் செய்திருக்கிறது. நடராஜன் மீண்டும் ஐதராபாத் அணிக்கு திரும்பி இருக்கிறார். அதேபோல் தனது ஊதியத்தையும் ரூ.5 கோடியாக குறைத்து கொண்டுள்ளார். நடராஜனுக்கு பதிலாக ஐதராபாத் அணி ஸ்பின்னரான ஜீசன் அன்சாரியை டிரேட் செய்திருக்கிறது.

    Advertisement

    அவருக்கு ரூ.40 லட்சம் ஊதியமாக அளிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அணியில் இருந்து குல்தீப் யாதவ் விலகியதால், அவரின் இடத்தை நிரப்ப ஜீசன் அன்சாரியை வாங்கி உள்ளனர். இதனால் இரு அணிகளுக்கும் இது லாபமாக அமைந்துள்ளது. ஐதராபாத் போன்ற பேட்டிங் சொர்க்கமாக பார்க்கப்படும் பிட்சில் நடராஜனின் யார்க்கர் பந்துகள் நன்றாக எடுபடும்.

    இதனால் ஐதராபாத் அணி தங்களின் அணியை சிறப்பாக கட்டமைத்து வருவதாக பார்க்கப்படுகிறது. நடராஜனின் கம்பேக்கை ஐதராபாத் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே ஷகிப் ஹுசைன், பிரஃபுல் ஹிங்கே ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். அவர்களுடன் நடராஜன் இணைந்தால், ஐதராபாத் அணி வேறு வடிவம் பெறும்.

    Advertisement

    இப்படியான டிரேட் ஒப்பந்தங்கள் நடப்பது அறிந்தும் சிஎஸ்கே அணி அமைதியாக இருந்து வருகிறது. ராகுல் சஹரை டெல்லி அணியிடம் விட்டுக் கொடுத்துவிட்டு நடராஜனை பெற்றிருக்க முடியும். ஆனால் சிஎஸ்கே அணி இப்படியான டிரேட் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    English Summary

    Natarajan: T Natarajan trades to SRH and Zeeshan Ansari trades to DC which surprised CSK Fans