துணைக் கேப்டன் பதவி மட்டுமல்ல.. ரிஷப் பண்ட்க்கு மிகப்பெரிய ஆப்பு வைத்த பிசிசிஐ.. இனி கஷ்டம்தான்!

  • மும்பை: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரே ஒரு போட்டி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகிய இரண்டிலும் சொதப்பியதால், அவரது துணை கேப்டன் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டிற்குப் பதிலாக, சீனியர் வீரர் கேஎல் ராகுல் டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 6ஆம் தேதி முல்லன்பூரில் தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.

    இந்திய அணியில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் என மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர். அதேபோல் பணிச்சுமை காரணமாக முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்த டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. முகமது ஷமிக்கு வழக்கம் போல் பிசிசிஐ ஆப்பு வைத்துள்ளது.

    Advertisement

    அதே நேரத்தில், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மானவ் சுதார், குர்னூர் ப்ரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகிய 3 இளம் வீரர்களுக்கு முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாட பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. துணை கேப்டன் பதவியை இழந்திருந்தாலும், இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பி ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    ஒயிட் பால் அணியில் இருந்து ரிஷப் பண்ட் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் லக்னோ அணியில் தொடர்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ரூ.27 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், லக்னோ அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.

    Advertisement

    இந்திய டெஸ்ட் அணி விபரம்:

    சுப்மன் கில் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், రిஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல்.

    English Summary

    Rishabh Pant: Major Blow to Rishabh Pant that he Sacked from Vice-Captaincy as BCCI Announces India Squad for Afghanistan Test