21 பந்துகள்.. ஒரு பவுண்டரி, சிக்ஸ் கூட அடிக்காத ருதுராஜ்.. ரசிகர்களை புண்படுத்திய சிஎஸ்கே கேப்டன்!

  • சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இந்த 21 பந்துகளில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸின் போதே இந்த பிட்ச்சில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது என்று தெரிந்தது. 2ஆம் பாதியில் பிட்ச் ஸ்லோவாகும் என்றே சொல்லப்பட்டது.

    Advertisement

    அதற்கேற்ப சஞ்சு சாம்சன் தொடக்கத்திலேயே அதிரடியாக ரன்களை சேர்த்தார். ஆனால் மறுபக்கம் ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடிக்க கூட முயற்சிக்கவில்லை. சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பின் உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கார்த்திக் சர்மா அட்டாக் செய்த போதும், ருதுராஜ் கெய்க்வாட் அட்டாக் செய்யும் எண்ணத்திலேயே இல்லை.

    இதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் கடைசி ஓவர் வரை களத்தில் இருக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே அணியின் திட்டம் என்பது தெரிய வந்தது. ஆனாலும் மற்ற வீரர்கள் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். இப்படியான சூழலில் சிறப்பாக ஆடிய கார்த்திக் சர்மா 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அட்டாக் செய்ய வேண்டிய பொறுப்பு ருதுராஜ் பக்கம் வந்தது.

    Advertisement

    அப்போது பிரெவிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களத்தில் இருந்தது. பிரெவிஸ் ஸ்லோ ஸ்டாட்டர் என்பதால், அவரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டும் என்று கம்மின்ஸ் அட்டாக்கில் வந்தார். அதற்கேற்ப டீப் மிக் விக்கெட்டில் ஃபீல்டரை நிறுத்தி பவுன்சரை வீசினார். உணர்ச்சி மிகுதியில் ருதுராஜ் கெய்க்வாட் புல் ஷாட் விளையாட, அது நேராக இஷான் மலிங்கா கைகளில் சென்று விழுந்தது.

    இதனால் 21 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த 21 பந்துகளில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் மொத்த ஆட்டத்தை மாற்றிவிட்டதாக ரசிகர்கள் உணர்ந்து அமைதியாக இருந்தனர். இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் அதிரடியான ஆட்டத்தை ஒரு இன்னிங்ஸில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad didn't even scored a single boundary or six in his 21 balls of 15 runs against SRH at Chepauk in IPL 2026