Ruturaj: வேலையை சரியாக செய்த ருதுராஜ் கெய்க்வாட்.. இதுதான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு இலக்கணம்!

  • சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, ரோகித் சர்மாவுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    Advertisement

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில் 1 ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    Advertisement

    இதன்பின் ரோகித் சர்மாவுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தொடர்ந்தார். பிட்சில் நல்ல ஸ்விங்கும், வேகமும் இருந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக அட்டாக் செய்து கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை பறி கொடுக்காமல் விளையாட வேண்டிய சூழல் உருவாகியது.

    அதேபோல் டாட் பால்களும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ரிலீஸ் ஷாட் ஆட முயன்ற போது ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் கொடுத்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டர் ஆண்ட்ரூ கோட்டைவிட்டார். தொடர்ந்து ஷாய் ஹோப்பிடம் கொடுத்த கேட்ச்சையும் கோட்டைவிட்டார். இப்படி ருதுராஜ் கெய்க்வாட்-க்கு 4 கேட்ச் வாய்ப்புகளை வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டர்கள் கோட்டைவிட்டனர்.

    Advertisement

    இதனை பயன்படுத்தி ருதுராஜ் கெய்க்வாட் சிக்சர்களாக விளாசி தள்ளினார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய போது, ஸ்ட்ரைக்கையும் அவரிடம் கொடுத்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த பின், பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் எடுத்து கொண்டார்.

    சிறப்பாக ஆடிய அவர் அரைசதத்தை கடந்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த போது, ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு ஏற்ப ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் அமைந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    English Summary

    Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Scored his 3rd ODI fifty against West Indies in the Last ODI at Chandigarh