ஜுரெல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்.. நம்பர் 4ல் விளையாடப் போவது யார்? இந்திய அணியின் பிளேயிங் XI

  • மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவார் என்றும், முதல் நிலை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளி வந்துள்ளது.

    Advertisement

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது. திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    வழக்கம் போல் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். அதேபோல் நட்சத்திர வீரர் விராட் கோலி 3வது இடத்தில் விளையாடுவார் என்பது எழுதப்படாத விதியாகும்.

    ஆனால் நம்பர் 4 பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவார் என்பது விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் நம்பர் 4 இடத்தில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரெல் மற்றும் நமன் திர் ஆகிய 3 பேர் போட்டியில் இருக்கின்றனர். ஆனால் தென்னாப்பிரிக்கா தொடரில் கடைசியாக ஆடிய போது, ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்திருந்தார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    Advertisement

    இதன்பின் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரும், நம்பர் 8ல் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், குர்னூர் ப்ரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆசியப் போட்டிகளில் ஆடுகின்றனர்.

    இதனால் குல்தீப் யாதவ் 3 போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவிற்கு முறையாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் இது அவருக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதேபோல் பும்ரா இல்லாததால், சிராஜ் கட்டாயம் தேர்வு செய்யப்படுவார். இளம் வீரர் ஆகிப் நபிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற விவாதமும் அதிகரித்திருக்கிறது.

    English Summary

    Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Set to Bat at No. 4, Kuldeep Yadav as Lead Spinner for 1st West Indies ODI