விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி.. சரிந்த இந்திய அணியை அசாத்திய சதத்தால் மீட்டெடுத்த ருதுராஜ்!

  • கொழும்பு: இலங்கையில் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில், இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக இந்திய 'ஏ' அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அசாத்திய சதமடித்து அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் போதிய ரன்களை குவிக்கவில்லை.

    Advertisement

    இதனால் ருதுராஜ் கெய்க்வாட் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கப்பட்டன. தற்போது இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் தேர்வுக் குழுவிற்கும், தனது விமர்சகர்களுக்கும் பேட் மூலமாகவே தக்க பதிலடி கொடுத்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய 'ஏ' அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி 14 ரன்கள் ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    Advertisement

    முதல் 5 ஓவர்களுக்குள்ளேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்து இருவரும் அதிர்ச்சியளித்தனர். 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது 4-வது விக்கெட்டாக களம் புகுந்தார் ருதுராஜ் கெய்க்வாட். மைதானத்தில் பலத்த காற்று வீசியதோடு பந்துவீச்சாளர்களுக்கும் பிட்ச் சாதகமாக இருந்ததால், ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்தார்.

    பிரியான்ஷ் ஆர்யா 32 ரன்களில் அவுட்டான பிறகு, கேப்டன் திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் ருதுராஜ். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி 4-வது விக்கெட்டுக்கு அசாத்தியமாக 150 ரன்களைக் குவித்து அணியை மீட்டெடுத்தது. தொடக்கத்தில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ஆடிய ருதுராஜ், களத்தில் நிலைத்து நின்ற பிறகு தனது விஸ்வரூபத்தை காட்டினார்.

    Advertisement

    மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளைப் பறக்கவிட்ட அவர், 112 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது உள்நாட்டு மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அவரது 21-வது சதமாகும். மொத்தம் 114 பந்துகளைச் சந்தித்த அவர் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ருதுராஜிற்கு மறுமுனையில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆங்கர் ரோல் செய்த கேப்டன் திலக் வர்மா 97 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். ருதுராஜின் இந்த கிளாசிக் சதத்தின் உதவியோடு, இந்திய 'ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.

    English Summary

    Ruturaj Gaikwad: Ruturaj Gaikwad Smashes 21st List-A Century to Rescue India 'A' Against Sri Lanka 'A' in Dambulla