ஆப்கானை வெளுத்த சாய் சுதர்சன்.. 81 ரன்கள் விளாசி அசத்தல்.. இந்திய அணியில் 'நம்பர் 3' இடம் கன்பார்ம்?

  • சண்டிகர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன் 81 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க சாய் சுதர்சன் போராடி வரும் சூழலில், இந்த அரைசதம் அவரின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த டெஸ்ட் தொடரிலும் சாய் சுதர்சன் நம்பர் 3 வரிசையில் வாய்ப்பை பெறுவார் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 81 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளக் கடுமையான போராட்டத்தை வெளிப்பபடுத்த வேண்டிய கட்டாயம் சாய் சுதர்சனுக்கு உள்ளது.

    Advertisement

    இப்படியான இக்கட்டான சூழலில் சாய் சுதர்சன் அடித்துள்ள இந்த அரைசதம் அவருக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்த போதிலும், மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் மிகவும் முதிர்ச்சியோடு விளையாடினார்.

    ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சுழற்பந்து வீச்சைத் திறம்பட எதிர்கொண்ட அவர், மைதானத்தின் நாற்புறமும் பந்துகளைச் சிதறடித்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக 104 பந்துகளில் 13 பவுண்டரிகள் உட்பட 81 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும்.

    Advertisement

    இந்திய டெஸ்ட் அணியின் ராகுல் திராவிட் மற்றும் புஜாரா போன்ற ஜாம்பவான்கள் அலங்கரித்த 'நம்பர் 3' வரிசையில் விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தப் பொறுப்பைத் தன் தோள்களில் சுமந்து, சாய் சுதர்சன் அடித்துள்ள இந்த 81 ரன்கள், தேர்வுக்குழுவினர் மற்றும் அணி நிர்வாகத்தின் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாகவே நிரந்தர நம்பர் 3 பேட்ஸ்மேன் கிடைக்காமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. இந்த சூழலில் சாய் சுதர்சனின் இந்த சிறப்பான ஆட்டம், இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கான எதிர்காலப் பாதையைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனை உணர்ந்து அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களிலும் சாய் சுதர்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Sai Sudharsan: Sai Sudharsan Shines with 81 Against Afghanistan, Solidifies His Claim for India's No. 3 Test Spot